உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாட்னாவில் அமைகிறது திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்; ரூ.1 கட்டணத்தில் நிலம் குத்தகை

பாட்னாவில் அமைகிறது திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்; ரூ.1 கட்டணத்தில் நிலம் குத்தகை

பாட்னா: பாட்னாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்டும் திட்டத்திற்கு பீஹார் அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதற்காக 99 ஆண்டுகளுக்கு ரூ.1 கட்டணத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது.இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக தலைவர் பி. ஆர். நாயுடு தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; பீஹார் மாநில தலைநகரான பாட்னாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட பீஹார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மொகமா காஸ் பகுதியில் 10.11 ஏக்கர் நிலத்தை ரூ.1 என குத்தகை நிலம் வாடகைக்கு 99 ஆண்டுகளுக்கு ஒதுக்கியதற்கு மனமார்ந்த நன்றி.இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ நாரா லோகேஷ் ஆகியோருக்கு நன்றி.புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்த பீஹார் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழக இயக்குநருக்கு நன்றி. திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதிநிதிகள் விரைவில் ஆலோசனைகளை தொடங்கி கோயில் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.பீஹார் அரசின் ஒத்துழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு மனமார்ந்த நன்றி.இவ்வாறு பி. ஆர். நாயுடு தமது பதிவில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ