பீஹார் தேர்தலில் மோசடி: ஆனால் ஆதாரம் இல்லை: பிரசாந்த் கிஷோர் காமெடி
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., மோசடி செய்து வென்றதாகக் கூறியுள்ள தேர்தல் வியூக வகு ப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆனால், தன்னிடம் அதற்கான ஆதாரம் இல்லை என்றார். பீ ஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238ல் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து, பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: நாங் கள் சேகரித்த கள நிலவரம் குறித்த மதிப்பீட்டுடன் தேர்தல் முடிவுகள் ஒத்துபோகவில்லை. ஏதோ தவறு நடந்துள்ளது. தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதல் ஓட்டுப்பதிவு நாள் வரை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, ஓட்டுப்போடுவதற்காக பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியது. இந்த தேர்தலில் கண்ணுக்கு தெரியாத சக்திகள் விளையாடியுள்ளன. மோசடி நடந்துள்ளது. ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.