உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வௌ்ளம்: 16 லட்சம் பேர் தவிப்பு

பீஹார் வௌ்ளம்: 16 லட்சம் பேர் தவிப்பு

பாட்னா, பீஹாரில் தொடர் கனமழையால் கோசி, பாக்மதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கங்கை உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பீஹாரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்கள் நீரில் மூழ்கின.பீஹாரிலும் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்ததால், கங்கை ஆற்றை ஒட்டியுள்ள பக்சர், போஜ்பூர், சரண், பாட்னா, பெகுசாராய் உட்பட 12 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், கோசி ஆற்றின் கரையோரத்தில் உள்ள தர்பாங்கா மாவட்டத்தின் கிர்தாபூர், ஞானஷ்யம்பூர் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.இதேபோல், பாக்மதி ஆற்றின் கரையோரத்தில் சீதாமாரி மாவட்டத்தின் ருனி சைதாபூர் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் சூழ்ந்தது. எனினும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோரங்களில் வசித்த, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ