உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு; தேர்தல் கமிஷன் மீது மீண்டும் ராகுல் புகார்!

பீஹார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு; தேர்தல் கமிஷன் மீது மீண்டும் ராகுல் புகார்!

புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். தற்போது, அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டி உள்ளார்.பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜ - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. மற்றொரு பக்கம் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zpoq8pxr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாக்காளர் பட்டியல்பீஹாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து, வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, சிறப்பு திருத்த சுருக்க பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.போராட்டம்போலி வாக்காளர்களை நீக்குவதற்கு பதிலாக, ஏழை, எளிய வாக்காளர்களை நீக்கிவிட்டு, பா.ஜ.,வுக்கு ஆதரவான பட்டியல் தயாரிக்கும் பணி நடப்பதாக ராகுல், தேஜஸ்வி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று( ஜூலை 9) பீஹார் மாநிலம் முழுவதும் தேர்தல் கமிஷனை கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது.பாட்னாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேஜஸ்வி யாதவ், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராகுல் பேசியதாவது: கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே, மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் இண்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னடைவுஆனால், வெகு சில தினங்களுக்குள் நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வகையில் பெரும் பின்னடைவை எங்கள் கூட்டணி சந்திக்க நேர்ந்தது. அப்போதே ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை யூகித்தோம். ஆனால், எதுவும் வாய் திறக்கவில்லை.லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு இடைப்பட்ட நாட்களில் நடந்த வாக்காளர் திருத்த, சுருக்க பட்டியலை சரி பார்த்தோம். புதிய வாக்காளர்கள்மிகக் குறுகிய நாட்களில் கிட்டத்தட்ட 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல முறை புகார் எழுப்பியும், தேர்தல் கமிஷன் அதை கண்டு கொள்வதாக இல்லை. ஓட்டுச்சாவடிகளின் வீடியோ பதிவை கேட்டால் அதை தர மறுக்கின்றனர். தற்போது பீஹார் தேர்தலிலும் அதைத் தான் செய்ய முயற்சிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் என்ற பெயரில், ஏழை, எளிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பற்றிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்த பிறகும், ராகுல் மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 10, 2025 04:10

கள்ளக்குடியேறிகளை நீக்கினால் காங்கிரசுக்கு எரிவது இயற்க்கைதானே..


HoneyBee
ஜூலை 09, 2025 21:52

தோல்வி நிச்சயம் என்பதால் அதை மடை மாற்ற இப்படி பேசிக்கொண்டு திரிகிறார் இந்த பப்பு


GMM
ஜூலை 09, 2025 21:03

போலி வாக்காளர்கள் இருப்பதை ராகுல் ஒப்புக்கொள்கிறார். உள்ளூர் ஏழையின் பெயரை நீக்க முடியாது. விட மாட்டார்கள். தேர்தல் ஆணையம் தன் ஊழியர்கள் இறுதி முடிவு எடுக்க வகை செய்ய வேண்டும். மாநில அரசு ஊழியர்களை நம்பி, வாக்காளர் அட்டை கொடுக்க கூடாது. அண்டை நாடுகளுக்கு ஓட்டுரிமை கொடுக்க அஞ்ச மாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 20:59

பிஹாரில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இப்போதே ராகுல் புலம்ப ஆரம்பித்து விட்டார். உலகிலேயே சிறப்பான தேர்தல் ஆணையம் இந்தியாவில் தான் உள்ளது என்று மேற்கத்திய நாடுகளே பாராட்டுகிறார்கள். கைப்புள்ள வந்துட்டார் குறை சொல்ல.