உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்

புதுடில்லி: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் அமளியின்றி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iro60mcp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அறிக்கை

அந்தக் குழுவினர் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது.ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம்; அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு, கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, 2024 ஆகிய இரண்டையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக் சபாவில் நாளை தாக்கல் செய்கிறார். மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும்.

சந்தேகம்

மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு விரும்புவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து, தொழில் அதிபர் அதானி விவகாரத்தை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடுகின்றன. பதிலுக்கு, 'இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்புடன் சோனியாவிற்கு தொடர்பு உள்ளது' என, பா.ஜ., எதிர் அமளியில் ஈடுபடுகிறது. இதனால், ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதா மீதான விவாதம், லோக்சபாவில் அமளி யின்றி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கூட்டம் ஒத்திவைப்பு

தி.மு.க., தலைமை செயற்குழு கூட்டம், கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.'தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும் 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கன மழை எச்சரிக்கையாலும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தி.மு.க., உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டிஇருப்பதாலும், செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது' என அவர் கூறியுள்ளார்.ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாக்களை அவசரமாக நிறைவேற்ற, பா.ஜ., அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, முழு மூச்சுடன் அதை தடுக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் எம்.பி.,க்கள் டில்லியை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
டிச 15, 2024 17:46

சீர்திருத்தம். 1-அமளியிடும் நாடாளுமன்றத்தை /சட்டமன்றத்தை விட்டு இப்படி அப்படி என்று சொல்லி கூச்சல் போட்டு நாடாளுமன்றம் / சட்டமன்றம் நடக்கவிடாமல் செய்யும் எம்பிக்கள் /எம் எல் ஏ க்கள் பதவி நீக்கம் செய்யவேண்டும் அவர்கள் இந்திய குடியுரிமை 9 வருடம் இல்லை அவர்களுக்கு என்று சட்டம்கொண்டு வரவேண்டும். 2-தவறு செய்பவர்கள் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே கொடுக்கவேண்டும் சிறைத்தண்டனை அல்ல, சிறைவாசம் முடிந்தவுடன் மறுபடியும் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் 3-பெரிய பதவியில் இருப்பவர்கள் - அமைச்சர்கள் கவுன்சிலர் .........எதிர்கட்சியினரை பற்றி உண்மையல்லாததை கேவலமாக பேசும் போது பதவி பறிக்கப்படவேண்டும். இது செய்தால் போதும் அவனவன் அவனவன் பணியை செய்து கொண்டிருப்பான்


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 16:23

நடைமுறை க்கு சாத்தியமற்றது. இப்போது பலருக்கும் MP தேர்தல் பூத் வேறு, MLA தேர்தல் பூத் வேறு. இது முதல் பிரச்னை. அடுத்தது, EVM மெஷின். MLA தேர்தலுக்கு ஒன்றும் , MP தேர்தலுக்கு ஒன்றும் ஒவ்வொரு பூத்திலும், வைக்க வேண்டும். பூத்துக்கு வாக்களிக்க வருபவர்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டி வரும். இரவு 9 மணி ஆனாலும் poling முடிக்க முடியாது. MLA தேர்தல் EVM. கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் MP தேர்தல் மிஷின் ஒன்றிய தேர்தல் ஆணையம் சீல் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் ஒரு மாநிலத்திலேயே பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மொத்த தேர்தல் முடிய, 8 - 10 மாதங்கள் எடுக்கும். அதாவது முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் லில் துவங்கினால் இறுதிக்கட்ட தேர்தல் நடத்தி முடிக்க டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கூட ஆகும். அனைத்து முடிவுகளும் அறிவிக்க மே மாதம் ஆகி விடும்.


ghee
டிச 15, 2024 20:01

அய்யா வைகுண்டம், சிறந்த அதிகாரிகள், மற்றும் தேர்தல் அணையம் அனைவரும் யோசித்து சேர்ந்து எடுத்த திட்டம்....தயவு செய்து உங்கள் உருப்படாத கருத்தை சொல்ல வேண்டாம்


Govind
டிச 15, 2024 21:26

இதான் பகுத்தறிவு செம்மல்கள் முதலை கண்ணீர் பக்கத்துல இருக்குற ஆந்திராவுல இந்த வருடம் சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்துல தான் நடந்தது அதுவும் ஒரே நாளில் நடந்தது . அப்ப நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ஒரே புளுகு மூட்டையை தவிர ஏதாவது உருப்படியா இருந்தா சொல்லுங்க அங்க ஒரு நாளில் நடப்பது போல் மற்ற மாநிலங்களிலும் நடந்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் ?


Kasimani Baskaran
டிச 15, 2024 13:56

திமுகவுக்கு ஆப்பு வைத்தால் அமளி பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்.


Balasubramanian
டிச 15, 2024 12:02

சீக்கிரம் நிறைவேற்றி 2025 க்குள் தேர்தல் நடத்துங்கள்! தமிழகத்தில் மாடல் அரசு மற்றும் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தொல்லை தாங்க முடியவில்லை


Nandakumar Naidu.
டிச 15, 2024 11:41

அமளி செய்யும் எம்பிக்களை குண்டு கட்டாக வெளியேற்ற வேண்டும். அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும். அவர்களை பாராளுமன்றம் அனுப்பியது அமளியில் ஈடுபட்டு கூச்சல் குழப்பம் உண்டாக்க அல்ல.


Barakat Ali
டிச 15, 2024 11:01

ஏற்கனவே இருந்த நடைமுறை ......


பாமரன்
டிச 15, 2024 08:45

நோக்கம் என்னன்னா எவ்ளோ கெஞ்சினாலும் நம்ம கம்பெனி ஸ்பான்ஸர் பற்றி பார்லிமென்ட்ல பேசாமல் இருக்க மாட்டேங்கிறாய்ங்க... இவிங்களுக்கு பதிலா பொய் சொன்னால் ரெக்கார்ட்ல பதிவாகிடும்... இப்போ இந்த எதிரி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆட்டைய கலைக்கறதுதான் ஒரேவழி ...


வைகுண்டேஸ்வரன், chennai
டிச 15, 2024 09:18

நாளை நமதே 40ம் வேஸ்ட். பாமரன் 200 ரூவா கதறல் பத்தல


பாமரன்
டிச 15, 2024 08:37

.....ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம் அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..... இப்போ அது தானே இருக்கு.... அப்போ எதுக்கு பருத்தி மூட்டையை குடோவ்ன்ல இருந்து எடுத்துட்டு வர்றாங்க


Siva Subramaniam
டிச 15, 2024 08:32

All noise makers should be removed from the house. Also, government should start educating the current generation of citizens, about who did what after 1947, most are mis-led by anti nationals.


கிஜன்
டிச 15, 2024 06:34

ராஜா கைய வச்சா ...அது ராங்கா போனதில்லே ..... அதெல்லாம் ஈஸியா நிறைவேற்றிருவங்க .... 2032 ல தான் அமுலுக்கு வருதாமே ? திமுகவினரே .... டில்லி குளிர்ல ரொம்ப நேரம் வெளில நின்னு கத்தினீங்கன்னா ... நிமோனியா காய்ச்சல் வந்துரும் ..... பார்த்து சூதானமா நடந்துக்குங்க ....


முக்கிய வீடியோ