உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு

உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் ஸ்பான்சர் செய்ததாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யுடியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=glpt62xc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தின் பணியாளர் டேனிஷ் என்பவரின் உதவியுடன், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு வி.வி.ஐ.பி., போல் நடத்தப்பட்டார். மேலும், ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சென்று வந்த அதே சமயத்தில், சீனாவுக்கும் பயணித்துள்ளார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சியில், உளவாளி ஜோதி மல்ஹோத்ரா பங்கேற்றதாகவும், அதற்கு முழுக்க முழுக்க சுற்றுலா துறையே ஸ்பான்சர் செய்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கேரள பா.ஜ., மாநில தலைவர் கே.சுரேந்திரன் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலாத்துறை ஸ்பான்சர் செய்துள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் தான் இருக்கிறார். ஜோதி மல்ஹோத்ரா யாரை சந்தித்தார்? எங்கு சென்றார்? அவரது வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன? பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?', என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை நிகழ்ச்சியில் அரசின் ஸ்பான்சர் மூலம் அவர் கண்ணூர் வந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, நேற்று டில்லி, மஹாராஷ்டிரா (மும்பை), ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாகிஸ்தான் உளவு விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்புகளையும், நிதி தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ravi Kulasekaran
ஜூன் 03, 2025 08:27

தமிழ் நாட்டில் சென்னை மற்றும் கோவை மதுரை திருச்சி போன்ற நகரங்களில் ஆய்வு பண்ணுங்க


Aruna Metal
ஜூன் 01, 2025 20:46

பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் சபாஷ் பேஷ் பேஷ் அரசியலில் இருப்பவர்கள் காமராஜரைப்போன்று திருமணமாகாத நாட்டுப்பற்று உள்ளவர்களாக தியாகிகளாக இருக்கவேண்டும். இப்போதெல்லாம் மனைவி, இணைவி துணைவி இல்லாள் அப்படி என்று நிறைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பெற்று எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து மஹாராஜாக்களை போல் வாழ்ந்தால் இப்படித்தான் இருக்கும்.


c.mohanraj raj
ஜூன் 01, 2025 20:23

நாட்டிற்கு அல்லது இறையாண்மைக்கு எதிரானவர்களுக்கு மரண தண்டனை தான் தர வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:15

என்னதான் ஆதாரங்களுடன் இதுபோன்றவர்களை அடையாளம் காட்டினாலும், கேரளா முதல்வர் மற்றும் அவரது மருமகன் மறுப்பார்கள். தமிழகத்தின் முதல்வருடைய மருமகன் வேறு விதத்தில் ஊழல். இங்கே கேரளாவின் முதல்வருடைய மருமகன் நாட்டை காட்டிக்கொடுப்பவளுக்கு உதவி. நமது நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும். கால தாமதம் அவர்கள் மேலும் மேலும் குற்றம் செய்ய வழிவகுக்கிறது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறது.


dinesh palanisamy
ஜூன் 01, 2025 11:04

இத்தனை நாள் உளவு துறை என்ன தூங்கி கொண்டு இருந்ததா? முதலிலேயே இந்த லேடி கைது பண்ணிருந்தா இத்தனை உயிர் போயிருக்காது


R.MURALIKRISHNAN
ஜூன் 01, 2025 10:05

பிரனாயின் மருமகனை இராணுவம் விசாரிக்க வேண்டும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகிகள்


Rathna
ஜூன் 01, 2025 09:54

நல்ல நாட்டை கெடுக்கும் தோழர்கள்


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 09:51

கம்மிகள் தேச விரோதிகள் என்பதற்கு ஆதாரம் துபாயில் கேரளா கூட்டம் பாகிஸ்தான் அஸோஸியேஷன் வளாகத்தில் கூட்டம் நடத்தி அந்த கூட்டத்திற்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி வருகை , அவனுக்கு வரவேற்பு ....


Ramamurthy
ஜூன் 01, 2025 09:31

தேச துரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்


V Venkatachalam
ஜூன் 01, 2025 09:06

விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த பின்னர் ....


புதிய வீடியோ