உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., நிர்வாகி சுட்டுக் கொலை

பா.ஜ., நிர்வாகி சுட்டுக் கொலை

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில், நிலத் தகராறில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்/ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் முண்ட்லானா நகரைச் சேர்ந்தவர் சுரேந்திர ஜவஹர். பா.ஜ., மண்டலத் தலைவராக பதவி வகித்தார். மேலும், 'நம்பர்தார்' எனப்படும் அல்லது நிலப் பதிவேடுகளைப் பராமரிக்கும் கிராமத் தலைவராகவும் பணியாற்றினார். நேற்று முன் தினம் இரவு, மோனு என்பவர் ஜவஹர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த கடைக்குள் ஜவஹர் ஓடினார். ஆனால், மோனு அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பினார்.இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மோனுவை தேடி வருகின்றனர்.மோனுவின் மாமா மற்றும் அத்தையிடம் இருந்து ஒரு நிலத்தை ஜவனர் வாங்கியுள்ளார். அது தொடர்பாக இருவருக்கு ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை