உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரத்துக்கு வருவதற்காக பா.ஜ., எதையும் செய்யும்: ஈஸ்வர் கன்ட்ரே

அதிகாரத்துக்கு வருவதற்காக பா.ஜ., எதையும் செய்யும்: ஈஸ்வர் கன்ட்ரே

பீதர்; ''ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜ., எதை வேண்டுமென்றாலும் செய்யும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ஜ., ஆட்சி காலத்தில் தான், விவசாயிகளுக்கு வக்பு வாரியத்தில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது எங்கள் மீது பழி போடுகின்றனர். வக்பு வாரியம் நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிராக பா.ஜ., தலைவர்கள் தனி போராட்டங்களை அறிவித்துள்ளனர். அந்த கட்சிக்கு ஒரு வீடு; நுாறு வாசல்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக, முதல்வர் கூறியது உண்மை. ஆட்சி, அதிகாரத்திற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வர். கடந்த காலத்தில் 17 எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து வாங்கியது பெரிய ஆதாரம்.பா.ஜ.,வில் முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாய்; அமைச்சர் பதவிக்கு 500 கோடி ரூபாய் மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ., எத்னால் கூறியது 100 சதவீதம் உண்மை.அவர் கூறியது பொய் என்றால் அவருக்கு ஏன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை.கர்நாடகாவின் இடைத்தேர்தல் நடந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மஹாராஷ்டிராவிலும் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சிக்கு வரும்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது. அரசு ஊழியர்கள் கூட, பி.பி.எல்., ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதாக புகார் வந்தது. அத்தகையோரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும். தகுதியானவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ