உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛போயிங் 787 விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

‛போயிங் 787 விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய போயிங் 787 விமானம் குறித்து அந்த விமான திட்டத்தில் பணிபுரிந்த அமெரிக்க இன்ஜினியர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆமதாபாதில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் 'போயிங் 787 ட்ரீம்லைன்லர்' வகையைச் சேர்ந்தது. இந்த விமான திட்டத்தில் பணிபுரிந்த அமெரிக்க இன்ஜினியர் சாம் சலேபோர் போயிங் 787 விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்தில் சிக்கும் என்பதை பல்வேறு பேட்டிகள், செனட் சபை ஆகியவற்றில் விளக்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=033359oz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 'போயிங் 787 ட்ரீம்லைன்லர்' விமானங்களின் உற்பத்தி செயல்முறையில் தீவிரமான குறைபாடுகளை கண்டேன். பியூஸ்லேஜ் எனப்படும் விமானத்தின் உடற்பகுதிகளை இணைக்கும் போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை. பொருந்தாத பாகங்களின் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரிசெய்தனர். இது விமானத்தின் உடற்பகுதியில் கண்ணுக்கு தெரியாத இடைவெளிகளை உருவாக்கும். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின், இந்தக் குறைபாடுகள் பேரழிவுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்னைகளை நான் எழுப்பிய போது போயிங் நிர்வாகம் வெளிப்படையாக வாயை மூடு என்றது இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R. Ravindran Iyer
ஜூன் 13, 2025 12:51

The Engineers whose statement should be taken on record for the probe in the accident issue. Boring company may repudiate his statement on the pretext that the plane worked very well all these years. His statement makes a point about manufacturing defects and predicted one day it will crash. That happened. Government of India and Air India must take up the issue and demand proper compensation for the loss of 241 lives as also loss for Air India.


JaiRam
ஜூன் 13, 2025 12:31

இந்த விமானங்களில் ஆரம்பம் முதலில் குறைபாடு இருந்தது உண்மை, பலமுறை சென்னை விமான நிலையத்தில் விமான புறப்படுவதற்கு முன்பு வின்சீல்டு எனப்படும் கண்ணாடி உடைந்து சரி செய்து புறப்பட்டது ஆரம்ப காலங்களில். மேலும் அமெரிக்க அரசின் நிர்பந்தத்தாலேயே இந்த விமானங்களை இந்திய அரசு அமெரிக்க நிறுவனமான போங்க இடமிருந்து வாங்கினார்கள் தவிர இதனுடைய தரத்திற்காக அல்ல. ஏர் பஸ் நிறுவனத்தின் விமானங்களை விட இவை சிறந்தது கிடையாது அமெரிக்க அரசின் நிர்பந்தத்தால் அதன் நட்பு நாடுகள் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டிருக்கின்றன, சில வருடங்கள் முன்பு கேரளாவில் நடைபெற்ற விபத்து கூட போயிங் ராகு விமானத்தில் நடைபெற்றது கடைசியில் இவர்கள் விமானின் மீது பழியை போட்டு விடுவார்கள் அனேமாக இப்பொழுதும் விமானின் மீது தான் பழியை போட்டுவிட்டு மறைத்துவிடுவார்கள். இப்பொழுது அவர்கள் குழு ஒன்றிய அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் விமானின் மீது குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்


Rathna
ஜூன் 13, 2025 12:29

கிறிஸ் பர்னேட்ட் என்ற போயிங் நிறுவன ஊழியர் நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கையால் எப்படி பிலைட்களின் தரம் மிகவும் குறைந்து உள்ளது என்று குரல் எழுப்பிய போது அவர் சில வருடங்களில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இது தான் அமெரிக்காவின் உண்மையான முகம்.


M Ramachandran
ஜூன் 13, 2025 11:18

அமெரிக்க கம்பெனிகள் பணம் பண்ணுவது ஒன்றெ குறிக்கோள். இது பற்றி நம் இந்தியா மற்றும் பயணிகள் விமானம் வாங்கும் உலக நாடுகள் கூடி சிந்திக்க வேண்டும். இது மட்டுமல்ல பலமருந்து தயாரிக்கும் அமெரிக்காகாமபனி களும் ஊழல் கார கம்பெனிகள். நம் தயாரிப்புகள் என்றால்குற்றம் குறைய்ய கண்டு பிடிக்க பூத கண்ணடி வைத்து பார்க்கும். உலகமும் வெள்ளை தோல் காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நினைக்கும் குணமுடன் உள்ளார்கள். அயல்நாடுகள் அத்தனையையும் நம்மை யம் ஆப்ரிக்கண்ட மக்களையும் கீழ் தரமாக நினையயக்கும் குணமுடையவர்கள். யுப்போது நிலமைய்ய தலைகீழ்.


Global Links
ஜூன் 13, 2025 13:28

Yes 1 lakh % correct


Sudha
ஜூன் 13, 2025 09:08

நாமார்க்கும் குடியல்லோம் என்பது பொய், அமெரிக்கா மற்றும் போயிங் கம்பெனி விசாரணைக்கு அப்பாற்பட்டவை


VENKATASUBRAMANIAN
ஜூன் 13, 2025 07:50

இவரையும் விசாரிக்க வேண்டும். போயிங் வெளிப்படையான அறிக்கை வெளியிடவேண்டும்


சாமானியன்
ஜூன் 13, 2025 06:35

மேலே எழும்பிய டீரீம் லைனர் இந்த முறை ஹைட் கெயின் பண்ணாமல் ஃபுல் டேங்க் பெட்ரோலுடன் தொப் என்று எதனால் விழுந்தது? ஏதோ ஒரு மெக்கானிஷம் கட் ஆகி இருக்க வேண்டும். எல்லாவற்றிருக்குமே பாதுகாப்பிற்காக ரிடன்ஸ்சி இருக்கும். அதுவுமா வேலை செய்யவில்லை? போயிங் நிறுவனம் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். டாடா நிறுவனர் சந்திரசேகர் பாராட்டுக்கு உரியவர். சமீப காலத்தில் இத்தகைய விபத்துக்கள் உலகிலே ஏற்பட்டதில்லை. சடலங்களை தேடும் பணி சாதாரணமானதல்ல. மனதைரியமும், அர்பணிப்பும் தேவை. இந்தியாவின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.


Ramaraj P
ஜூன் 13, 2025 06:28

ஆய்வு இப்படியெல்லாம் தான் செய்ய வேண்டும் என சொல்வது தயாரிப்பு நிறுவனம் தானே திமிங்கிலம்.


Iniyan
ஜூன் 13, 2025 06:14

இந்த என்ஜினீரின் பின் புலத்தை ஆராய வேண்டும். இவர் கம்யூனிஸ்டா இருக்கலாம். இவர்கள்தான் இப்படி பொய்களை சொல்வதில் கெட்டிக்காரர்கள்.


Jana
ஜூன் 13, 2025 05:33

ஒரு வருடத்திற்கு முன் கொடுத்த வாக்குமூலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை