குருவாயூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கப் போவதாக கோயில் தேவசம் போர்டு நிர்வாகி ரகுராமனுக்கு வந்த மர்ம கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வணிகவளாகத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதனையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.