அதிக விபத்து நடக்கும் இடம் பொம்மனஹள்ளி
பெங்களூரு: 'நாட்டிலேயே அதிக விபத்து நடக்கும் இடம், பெங்களூரின் பொம்மனஹள்ளி' என்று, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.'எக்கோ ஆக்சிடென்ட் இண்டெக்ஸ்' என்ற தனியார் நிறுவனம், இந்த ஆண்டு, இந்தியா முழுதும் நடந்த விபத்துகள் குறித்த தகவலை சேகரித்து வெளியிட்டுள்ளது.இதில் நாட்டிலேயே அதிக விபத்துகள் நடக்கும் இடமாக, பெங்களூரின் பொம்மனஹள்ளி பகுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரும்பாலும் சாலை பள்ளங்களால் அதிக விபத்துகள் நடப்பதாகவும், இந்த ஆண்டு 44.8 சதவீத விபத்துகள் அங்கு நடந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.பெங்களூரில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் பொம்மனஹள்ளி உள்ளது. இரண்டு மாநிலங்களை இணைக்கும் சாலை என்பதால், பொம்மனஹள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.சாலை பள்ளங்களாலும், வாகன ஓட்டிகளின் அலட்சியத்தாலும் விபத்து ஏற்படுவது தெரியவந்துள்ளது.