உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 வயதில் காணாமல் போன சிறுவன்; 14 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்ததில் நெகிழ்ச்சி

8 வயதில் காணாமல் போன சிறுவன்; 14 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்ததில் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போய், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி மாவட்டம் காங்காலா கிராமத்தைச் சேர்ந்தவன் சிறுவன் நீரஜ் கன்னாஜூயா. இவனுக்கு 8 வயது இருக்கும் போது, இவரது தந்தை குடும்பத்தோடு, பிழைப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்தார். இவரது மூத்த சகோதரர் ஆடை வடிவமைப்பாளராகவும், தந்தை சலவை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். தந்தை வேலை செய்யும் கடைக்கு எதிரே உள்ள பேக்கரியில் 8 வயது சிறுவன் நீரஜ் பணியாற்றி வந்தான். இந்த சூழலில், மும்பையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறிய நீரஜ், ரயிலில் ஏறி காணாமல் போனான். பெற்றோரை இழந்து பரிதவித்த நீரஜ், பல ரயில்நிலையங்களில் பெற்றோரை தேடி அலைந்துள்ளான். இறுதியில் அவன் ஆந்திராவின் குண்டூர் ரயில்நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு அவனை மீட்ட போலீசார், ஆந்திராவில் உள்ள ஸ்வர்ன பாரத் டிரஸ்டில் சேர்த்தனர். அந்த டிரஸ்டில் சேர்ந்த நீரஜ், அங்கேயே கல்வி பயின்றான். அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் டிரஸ்டின் நிர்வாகி தீபா வெங்கட் முயற்சித்தார். அதேவேளையில், நீரஜூக்கு பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வொர்க், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் பழுது பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இப்படியே 14 ஆண்டுகள் ஓடி விட்டன.இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீரஜின் பெற்றோரை கண்டுபிடிப்பது தொடர்பாக, டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் மும்பையில் உள்ள குரார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மெசேஜ் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹோலி பண்டிகைக்கு முன்பாக, பெற்றோரை கண்டுபிடிப்பதாக நீரஜையும், டிரஸ்ட் நிர்வாகி ஒருவரையும் மும்பையின் மல்லட் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தந்தை பணியாற்றிய இடத்தை அடையாளம் கண்ட நீரஜ், தான் சிறு வயதில் பணியாற்றிய பேக்கரியையும் கண்டுபிடித்தார். பல்வேறு தேடுதல் பணிகளுக்குப் பிறகு, பெற்றோரை அடையாளம் கண்டு பிடித்தார். பின்னர், பெற்றோரிடம் இருந்து வந்த வாட்ஸ்ஆப் வீடியோ காலில், கண்ணீர் மல்க நடந்ததை விவரித்தார் நீரஜ். அதன்பிறகு, பெற்றோர் வாரணாசியில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து, உடனடியாக விமானத்தின் மூலம், மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றான். 14 ஆண்டுகளுக்குப் பிறகு நீரஜை, அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு வரவேற்றனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N Annamalai
ஏப் 03, 2025 14:50

நல்ல வேலை அந்த லாகிரி இருந்த இடத்தில மெட்ரோ ரயில் வரவில்லை .வந்து இருந்தால் இவரால் பெற்றோரை கண்டு பிடித்து இருக்க முடியாது .முயற்சி செய்து குடும்பத்தை இணைத்த அனைவருக்கும் நன்றி.


Rajah
ஏப் 03, 2025 13:53

அந்த சிறுவன் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தால் சில வேலை முதலமைச்சர் ஆகியிருக்கலாம்.


Pandi Muni
ஏப் 03, 2025 16:27

என்ன செய்ய கருணாநிதி மாதிரி அதிர்ஷ்டசாலி இல்லை தமிழ்நாட்டை கொள்ளையடிக்க


Premanathan Sambandam
ஏப் 03, 2025 13:37

பத்திரிகையில் வந்த மகிழ்ச்சியான செய்தி சந்தோசம்


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 03, 2025 12:29

நல்லவேளை அந்த பேக்கரி அப்படியே இருந்தது.


கிருஷ்ணதாஸ்
ஏப் 03, 2025 12:05

குடும்பத்தினருக்கு புதையலும், பொக்கிஷமும் ஒன்றாய் கிடைத்துள்ளன!


Saai Sundharamurthy AVK
ஏப் 03, 2025 11:44

எல்லாம் நன்மைக்கே ! எல்லாம் இறைவன் செயல் ! என்பது உண்மை தான் !!!!


Tiruchanur
ஏப் 03, 2025 11:39

பகவான் இருக்கார். அந்த குண்டூரூ ஆஷ்ரமத்திற்கு மிக்க நன்றி


Anantharaman Srinivasan
ஏப் 03, 2025 11:19

பெற்றோருடன் இருந்திருந்தால் படிப்பறிவுயில்லாமல் பேக்கரி வேலையில் தான் இளம் வயது கடந்திருக்கும். ஆந்திரா ஹாஸ்டலில் வளர்ந்ததால் நீரஜூக்கு பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வொர்க், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் பழுது பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் கிடைத்துள்ளது. இளம் வயதில் தாய் தந்தை அரவணைப்பு மிஸ்சிங்.


Ray
ஏப் 03, 2025 11:49

கொஞ்சம் மாத்தி யோசிப்போமே சிறுவனுக்கு யாரோ உதவி செய்து அவனை ஒரு டாக்டர் என்ஜினியர் அல்லது வக்கீலாக ஆகியிருக்கலாம். ஆந்திரா ஆஸ்டல் போலீஸ் என்பதுபோல இதுவும் மும்பையிலேயே நிகழ்ந்திருக்கலாம் அல்லவா? "coincidence is Gods way of remaining anonymous." உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் ஒருவரை சொந்த ஊர் அனுப்ப பாதுகாத்து இட்டுச்சென்றபோது வந்து நின்றது அவர் ஊருக்கான பேருந்து. அனுப்பிவிட்டு அலுவலகம் வந்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவரைக் கொல்ல கத்தி கபடாவுடன் வந்து சேர்ந்தது ஒரு பெருங்கூட்டம். இறைவனின் கையில்தான் நம் வாழ்க்கை


முக்கிய வீடியோ