உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு

பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு

புதுடில்லி: அக்னி வீரர்களுக்கான வேலை வாயப்பில் இட ஒதுக்கீட்டு முறையை பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடைய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம்.இவர்களுக்கு பிற துறைகளில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவக்கி ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது.இந்நிறுவனம் அக்னி வீரர்களுக்கு வேலைவாயப்புகளில் இட ஒதுக்கீட்டை அறிவித்தது, இதன் படி பாதுகாப்பு மற்றும் நிர்வாகப்பிரிவுகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடும், தொழில்நுட்ப பிரிவில் 15 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
செப் 28, 2024 08:53

Similar Reservations Must be Done in All Category Posts for All Categories of Non-Pensioner SS Officers& Men in All Govt/Public/ Private Sector Jobs


Kasimani Baskaran
செப் 28, 2024 06:42

அங்கிருந்து மிக எளிமையான தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அவர்களுக்கு பொருள்களை உருவாக்கிக்கொடுத்தாலே கூட தொழில் முனைவராகி பணத்தை அள்ள முடியும். அளவில்லா, எளிதில் கிடைக்காத வாய்ப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை