உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூளையை தின்னும் அமீபா; கேரளாவில் மேலும் ஒருவர் பலி

மூளையை தின்னும் அமீபா; கேரளாவில் மேலும் ஒருவர் பலி

வயநாடு: மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு, கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளது. மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நீரில் குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் வாயிலாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்ற அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வயநாட்டின் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதேஷ், 45, என்ற நபர் கடந்த 20 நாட்களாக கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு இதய பாதிப்பும் இருந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில் ரதேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் மட்டும், அமீபிக் மூளை காய்ச்சல் தாக்கி மூன்று பேர் பலியாகினர். ரத்தேஷையும் சேர்த்து பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆண்டு மட்டும், 42 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
செப் 07, 2025 09:23

கண்டதையும் தின்னும் மனிதனின் மூளையை ஏன் அமீபா சாப்பிடக் கூடாது ?


தியாகு
செப் 07, 2025 07:30

மூளையை தின்னும் அமீபா டுமிழ்நாட்டிற்க்கு வர வாய்ப்பே இல்லை. ஏன்னா டுமிழர்கள் மூளையெல்லாம் மழுங்கி கட்டுமர திருட்டு திமுகவிற்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போட்டு மூளையில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் அமீபா நல்ல மூளைகளைத்தான் தேடி சாப்பிடும். டுமிழர்களின் கெட்டுப்போன மூளைகளை விரும்பாது.


Artist
செப் 07, 2025 07:01

குளிக்கறது அவங்களுக்கு கட்டாயமில்லாதது தானே ..


Svs Yaadum oore
செப் 07, 2025 06:47

மாட்டுக்கறி தின்னும் கேரளா 25 வருடங்களாக அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்றான் ...அதை கேட்க விடியலுக்கு வக்கில்லை ...ஆனால் கேரளாக்காரனுக்கு விடியல் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து ....


Svs Yaadum oore
செப் 07, 2025 06:14

மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சலாம் ...பெயரை கேட்கவே பயமாக இருக்குது .... ....உலகத்தில் எந்த புது காய்ச்சல் வியாதி பரவினாலும் அது கேரளவுக்குதான் முதலில் வரும் ....சேட்டன்கள் தினம் தினம் மாட்டுக்கறி தின்று அதனுடன் போதை சரக்கடித்தால் இப்படித்தான் வியாதிகள் வரும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை