உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.எஸ்., அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது. புதுடில்லியில் உள்ள வரிசெலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருப்பவர் அமித்குமார் சிங்கால். மூத்த வருவாய் சேவை அதிகாரியான இவர், ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றதாக டில்லியில் வசந்த்குஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ., அதிகாரிகள், ஹர்ஷ் கோட்டக் என்ற நபரை கைது செய்தனர். அவர் மொஹாலியில் உள்ள அமித்குமார் சிங்கால் இல்லத்தில் அவருக்கு பதிலாக லஞ்ச பணத்தை வாங்கிய போது சிக்கினார். 2007ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான அமித்குமார் சிங்கால் கைது செய்யப்பட்டதை அடுத்து டில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட பல நகரங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் இல்லங்களில் சோதனையில் இறங்கினர்.சோதனையின் முடிவில் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: அமித்குமார் சிங்காலுக்கு டில்லி, பஞ்சாப், மும்பை ஆகிய நகரங்களில் ஏராளமான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வங்கிகளில் 25 கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பீடு நடந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

D Natarajan
ஜூன் 05, 2025 12:32

இவனுக்கு தண்டனை கிடைக்குமா? நமது நீதி துறை, உலகிலேயே மோசமானது, பிணை கொடுத்து விடும். அதோடு வழக்கும் முடிந்து விடும். குறைந்தது 20 வருஷம் ஆகும். இவர் இருப்பாரா என்னவோ கடவுளுக்கு தான் தெரியும்


Padmasridharan
ஜூன் 03, 2025 17:37

புகார் அளித்தவரின் தைர்யத்துக்கு வாழ்த்துகள்.. வெளியில் வந்தது சிலர் வராதது பலரும் உள்ளனர்.


venugopal s
ஜூன் 03, 2025 15:04

எந்தக் கட்சி நாட்டை ஆண்டாலும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இப்படித்தான் இருப்பார்களோ?


R.RAMACHANDRAN
ஜூன் 03, 2025 07:42

அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் இல்லாமல் சேவை இல்லை என துணிந்து சட்ட விரோதமாக பணம் ஈட்டி சொத்து குவிப்பதிலேயே குறியாக உள்ளனர்.அவர்களில் அரிதினும் அரிதாக ஓரிருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.மற்றவர்கள் லஞ்சத்தில் பங்கு கொடுத்து தப்பிக்கின்றனர்.


RajendraK
ஜூன் 03, 2025 07:40

லஞ்ச பேய்களிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 03, 2025 04:11

ஒரு அதிகாரியிடம் இவ்வளவு குவிந்து இருந்தால் - மீதி கேடிகளை பிடித்தால் எவ்வளவு சிக்குமோ...


Thravisham
ஜூன் 03, 2025 03:45

ஏங்க நம்ம வித்தவுட் வந்தவரின் வாரிசுகளிடம் ஏன் ஐடியா கேட்கவில்லை? மொத்த குடும்பமும் துபாய்க்கு பறந்து 6000கோடி பணத்தை என்னம்மா பதுக்குனாங்க


கல்யாணராமன்
ஜூன் 02, 2025 23:20

நீதிபதி வீட்டிலேயே கட்டு கட்டாக பணம் இருந்ததை பார்த்தோம். எனவே சந்தேகம் என்று வந்து விட்டால் ஒருவரையும்விடாமல் நீதிபதிகள் உள்பட அனைவரின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையே.


அப்புசாமி
ஜூன் 02, 2025 23:03

மாட்டுனவன் கிட்டே இத்தனை. மாட்டாம எத்தனை பேர் ஆட்டையப் போட்டிருக்காங்களோ... ஒன்றிய சர்க்காரில் இதெல்லாம் சகஜம்


RajendraK
ஜூன் 03, 2025 07:42

விடியா ஆட்சி கொள்ளையை விட இது வெறும் கொசுறு.


m.arunachalam
ஜூன் 02, 2025 22:51

தற்போதய நிலையில் இது பெரிய தொகை அல்ல . என்ன செய்வது அந்த துறை அப்படி. நடக்க வைத்துவிடும் .