லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்
ஓமலுார் :சேலம், குரங்குச்சாவடியை சேர்ந்தவர் முத்து, 45. தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றினார். இவர் நேற்று முன்தினம், கனிம கடத்தல் கும்பலிடம், 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானது. இதையடுத்து அன்று இரவே, முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று, அவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.