உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் டிரைவர் இறப்பு; போலீசார் விசாரணை

பஸ் டிரைவர் இறப்பு; போலீசார் விசாரணை

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நாராயணன், 64. மனைவி சரஸ்வதி, மகள் சரிதா ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் மாங்கரை அருகே, தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை வடக்கஞ்சேரி, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைத்திருந்த, தனியார் பஸ்சினுள் இறந்து கிடந்தார். இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இரவு வீட்டிற்கு செல்லாததால், அவரை தேடி வந்த குடும்பத்தினரும் அங்கு வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வடக்கஞ்சேரி போலீசார், நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், இறப்புக்கான காரணம் தெரியவரும், என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை