உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செவ்வாய்தோறும் ஆலோசனை விவசாயிகளுக்கு அழைப்பு

செவ்வாய்தோறும் ஆலோசனை விவசாயிகளுக்கு அழைப்பு

“இந்த நாட்டின் ஆன்மாவாக விளங்குவோர், விவசாயிகள். இனி வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விவசாயிகளை சந்தித்து, அவர்களின் குறைகள் கேட்கப்படும்,” என, மத்திய விவசாய அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் கூறினார்.மத்திய விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் சமீபத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், 'ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.'இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் குறைகளை கேட்பதோடு, அவற்றுக்கான தீர்வுகளும் கண்டறியப்படும்' என்று தெரிவித்திருந்தார். இதன்படி, டில்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சி மைய வளாகத்தில் விவசாயிகளுடனான சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பல அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுடன் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். அப்போது, எந்த பிரச்னையாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்கும்படியும், உரையாடல்கள் வாயிலாகவே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை எட்ட முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.இதன்பின், செய்தியாளர்களுக்கு அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டி: இந்தியாவின் முதுகெலும்பு போன்றது விவசாயம். இந்த நாட்டின் ஆன்மா, விவசாயிகள். விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம். ஏராளமான விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அவர்கள், ஏராளமான பரிந்துரைகளை தந்தனர். நான் பேசுவதைக் காட்டிலும், அவர்கள் கூறும் கருத்துகளை கவனத்துடன் கேட்டேன்.இனி, திட்டமிட்டபடி வாரந்தோறும் செவ்வாய் கிழமை விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகள் கேட்கப்படும். விவசாய அமைச்சகம் உங்களுக்கானது. இவ்வாறு அடிக்கடி சந்தித்து பேசி ஆலோசனைகளை பரிமாறுவதன் வாயிலாக, எத்தகைய கடினமான பிரச்னைகளுக்கும் தீர்வுகளை காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரோக்யராஜ், திருவள்ளூர்
செப் 25, 2024 09:36

நல்ல முயற்சி, சிவராஜ் சிங் அவர்கள் மிக திறமையான முதலைமைச்சராக மத்திய பிரதேச மாநிலத்தை வழி நடத்தி பாஜகா வை மீண்டும் ஆட்சி கட்டில் ஏற்றியவர். மத்திய கேபினட்டில் மூத்த அமைச்சராக இருக்கும் அவர் விவசாய துறையில் மகத்தான சாதனை புரிய வாழ்துக்கள். 100 நாள் திட்டத்தை கொண்டு வந்தது காங்க்ரஸ்,தற்போதைய அரசு அதில் நடந்த மோசடிகளை களைந்து குறைகளை போக்கி வருகிறது.


Jaganathan R
செப் 25, 2024 06:34

100 நாள் என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்து விவசாய தந்தையே அழிச்சாச்சு இனி என்ன ஆலோசனை வேண்டிகிடக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை