உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் விதியை மத்திய அரசு மாற்றியதை.. ரத்து செய்க

தேர்தல் விதியை மத்திய அரசு மாற்றியதை.. ரத்து செய்க

புதுடில்லி : 'தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்தது தில்லுமுல்லுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.தேர்தல் சம்பந்தமான அனைத்து தகவல்கள், ஆவணங்கள், வீடியோ பதிவுகளையும் பொதுமக்கள் பார்வையிட தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறது. தேர்தல் நடைமுறை முற்றிலும் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே, தேர்தல் மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்பதால், 1961ம் ஆண்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன.அத்துடன், கட்சிகளோ வேட்பாளர்களோ அல்லது தேர்தல் பணியில் ஈடுபடும் லட்சக்கணக்கான அதிகாரிகளோ முறைகேடு செய்யாமல் தடுக்கவும், இந்த வெளிப்படைத்தன்மை உதவும் என, அப்போது இருந்த தேர்தல் கமிஷன், அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த பிரச்னையும் இல்லாமல், இந்த விதிகள் அமல் செய்யப்பட்டன.சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு வேட்பாளர், தன் தொகுதியின் சில சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவு ஆவணங்களையும், வீடியோ பதிவையும் கேட்டார்; தேர்தல் கமிஷன் தர மறுத்தது; அவர் கோர்ட்டை நாடினார். தேர்தல் நடத்தை விதிகள் அனுமதிப்பதால், மனுதாரர் கேட்கும் ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் கொடுத்தாக வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து தேர்தல் கமிஷனை மத்திய அரசுக்கு அவசர பரிந்துரை அனுப்பியது. அதை ஏற்று, மத்திய அரசு, 1961ம் ஆண்டு 'தேர்தல் நடத்தை விதிகள் சட்ட விதி - 93-2 - ஏ'யில் உடனே திருத்தம் செய்து, கடந்த வெள்ளிக்கிழமை அரசாணை பிறப்பித்தது.'எல்லா ஆவணங்களையும்' என்பதற்கு பதிலாக, 'விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை' என திருத்தி எழுதியுள்ளது.இதனால், ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சொல்லப்பட்ட எண்ணிக்கைக்கும், கடைசியில் அறிவிக்கப்படும் இறுதி எண்ணிக்கைக்கும் இடையே, முரண்பாடுகள் நேரும்போது, தேர்தல் அதிகாரி அதற்கு என்ன காரணம் அல்லது விளக்கம் கொடுத்தார் என்பது போன்ற முக்கியமான தகவல்களை, பொதுமக்கள் இனிமேல் அறிந்து கொள்ள முடியாது. இது, இந்திய தேர்தலின் அடிப்படை பலமான வெளிப்படைத் தன்மையை சிதைத்துவிடும் என, ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த கட்டுப்பாடு விதிக்காவிட்டால் ஓட்டு போடுபவர்கள் குறித்த ரகசியத்தை காக்க முடியாமல் போகும்; அதனால் காஷ்மீர் போன்ற, 'சென்சிடிவ் ஏரியா'க்களில் மோசமான விளைவு ஏற்படும் என்று, தேர்தல் கமிஷன் சொல்கிறது. வீடியோ காட்சிகள், மின்னணு ஆவணங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முற்றிலும் வேறுமாதிரி சித்தரிக்கும் ஆபத்தும் இருப்பதாக கமிஷன் கூறுகிறது. அவ்வாறு, தேர்தல் பதிவுகளை தவறாக யாரும் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்துடன், சில மின்னணு ஆவணங்கள், பொதுமக்கள் கைகளுக்கு கிடைப்பது மட்டுமே, இந்த திருத்தத்தின் வாயிலாக, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது. இந்த பின்னணியில் தான், மத்திய அரசு செய்துள்ள திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.இது குறித்து காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக சிதைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உதவும் என நம்புகிறோம். 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டிய அரசியல்சாசன அமைப்பான தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக, பொது ஆலோசனையின்றி இதுபோன்ற முக்கிய சட்டத்தை திருத்துவது வெட்கக்கேடானது. இதை அனுமதிக்க முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.n. Dhasarathan
டிச 25, 2024 21:10

தேர்தல் விதிகளை மத்திய அரசு மாற்றுவது ஏன் ? சர்வாதிகார ஆட்சிதான் மக்கள் சபையில் விவாதம் ஏன் நடத்தவில்லை, ? பயங்கர வாத நாடா இது ? சட்டத்தை தன இஷ்டத்திற்கு வளைப்பது ஏன் ? நீதி மன்றங்கள் தடுக்குமா ? தன்னாட்சி பெட்ரா அமைப்புகள் ஏன் பிரதமர் காலில் விழுந்து கிடக்கின்றன ? தேர்தல் ஆணையம் ஏன் சுயமாக வேலைகள் செய்வதில்லை ? முன்னள் தலைமை தேர்தல் ஆணையர் டீ.ன். சேசன் தெரியுமா ?அவர் வகித்த பதவிக்கு பொருத்தமில்லாதவர்கள் வந்துவிட்டார்களா ?


M Ramachandran
டிச 25, 2024 16:53

தில்லு முல்லுக்கு காரண கர்த்தா கான்க்ரஸ் கட்சியும் அதன் ராகுலும் மற்றும் வயதான அந்த கட்சியின் தாத்தாக்களுமே ஆகும் . தன்னை போல் பிறறை நினை என்ற சொல்லுக்கு தகுந்ததது போல் நடவடிக்கை இருக்கு.


Kalaiselvan Periasamy
டிச 25, 2024 14:05

காங்ரஸ் என்ற மட்டமான கட்சி ஒழிந்தால் தவிர இந்தியா உருப்படும் . உச்சநீதி மன்றமும் நாட்டிற்கு எது நல்லது என்பதை அறிந்து தெளிந்து தீர்ப்பு வழங்கினால் நல்லது .


Bahurudeen Ali Ahamed
டிச 25, 2024 16:32

2014 க்கு முன்பு காங்கிரஸ் பிஜேபி ஒழிந்தால் நல்லது என்று நினைத்து தேர்தல் விதிமுறைகளில் தகிடுதத்தம் செய்திருந்தால் ஒப்புக்கொள்வீர்களா, ப்ரோ ஜனநாயக நாட்டில் எப்பவுமே எதிர்க்கட்சிகள்தான் ஆளும்கட்சிகளுக்கு கடிவாளம், கடிவாளம் இல்லாத வண்டி தடம் புரளும்


Bahurudeen Ali Ahamed
டிச 25, 2024 11:36

சந்திரன் அவர்களே இங்க என்ன முட்டு கொடுக்கும் போட்டியா நடக்கிறது, பிஜேபி செய்ய நினைப்பது சரியா தவறா என்று மட்டும் பாருங்கள் சகோ


Nagarajan D
டிச 25, 2024 11:30

எப்படி அன்று நவீன் சாவ்லா எனும் சோனியாவின் எடுபிடி ஜாமீன் செட்டியார் ராஜகண்ணப்பனை தோற்கடித்தாக ஒரு நாடகம் ஆடி ஜாமீன் செட்டியாரை வென்றதாக அறிவுத்தானே அதைபோலவா? உலகத்திலுள்ள அனைத்து மொள்ளமாரித்தனத்துக்கும் காந்தி கூட்டமே அகராதி...


Sridhar
டிச 25, 2024 10:57

ஒவ்வொரு பூத்திலும் கட்சி ஏஜென்ட்கள் இருக்காங்களே? எல்லா விஷயமும் அவுங்களுக்கு தெரிஞ்சி தானே நடக்குது. அப்புறம் என்ன பிரச்சனை?


Bahurudeen Ali Ahamed
டிச 25, 2024 10:34

பிஜேபி தேர்தல் விதிகளை தனக்கு மட்டும் சாதகமாக வளைத்துக் கொள்ள பார்க்கிறது, நாதரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் என்கிற வடிவேலுடுடைய வாக்குக்கேற்ப, தேர்தலில் எந்த தில்லுமுல்லு செய்தாலும் அதற்கு எந்த சாட்சியும் இல்லாமல் செய்யப்பார்க்கிறது, இதற்கும் சில பேர் முட்டுக்கொடுக்க வருவார்கள். என்ன செய்ய?


சந்திரன்,போத்தனூர்
டிச 25, 2024 11:12

நீ காங்கிரஸூக்கு முட்டுக் கொடுப்பதை விடவா அடுத்தவர்கள் முட்டுக் கொடுக்க வரப் போகிறார்கள்..


venugopal s
டிச 25, 2024 10:31

இது போன்ற தில்லுமுல்லு வேலைகள் செய்தால் தானே நாங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும்!


enkeyem
டிச 25, 2024 11:47

இப்பவே என்ன தில்லு முள்ளு செய்தும் இந்த தேர்தலில் நூறு சீட் நெருங்க முடியவில்லை. இப்போது பிஜேபி கொண்டுவரும் தேர்தல் விதிகள் மாற்றத்தால் தில்லு முள்ளு செய்ய முடியாமல் உங்கள் கட்சி கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது மிஸ்டர் வேணு


தாமரை மலர்கிறது
டிச 25, 2024 09:25

தேர்தல் ஆணையம் ஒட்டு போட்டவர்களின் ரகசியத்தை பாதுகாப்பது அதன் கடமை. அதனால் காங்கிரஸ் மனு குப்பைத்தொட்டிக்கு தான் செல்லும் . எந்த தகவலையும் எதிர்கட்சிக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சந்தேகபேர்வழிகள் .


Kasimani Baskaran
டிச 25, 2024 08:52

காங்கிரஸ் சொல்லும் பொய்களை நம்பி ஓரளவுக்கு ஓட்டுப்போட்டு எதிர்க்கட்சி என்ற அளவில் வைத்திருக்கும் பொழுது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் திரும்பவும் எதிர்க்கட்சியாக கூட வர முடியாத நிலை ஏற்படலாம் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை