உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைநகர் பணிகள் துவக்கம்!

தலைநகர் பணிகள் துவக்கம்!

ஆந்திராவின் அமராவதி மாவட்டத்தில், தலைநகரை அமைக்கும் பணிகளை மீண்டும் துவங்கி உள்ளோம். தலைநகருக்காக நிலங்களை தியாகம் செய்த விவசாயிகளுக்கு, அமராவதியின் வளர்ச்சி பலன்கள் முதலில் கிடைக்க வேண்டும். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மாற்று இடத்தில் விரைவில் நிலம் வழங்கப்படும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

தனித்து போட்டி!

உத்தர பிரதேசத்தில், 2027ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும். பா.ஜ., - காங்., கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். தேர்தலில் கூட்டணி வைக்கும் போதெல்லாம், எங்கள் ஓட்டு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்

சர்க்கஸ் நடத்த தெரியும்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது தெரியவில்லை. 'சர்க்கஸ்' நடத்த மட்டுமே அவருக்கும், காங்., நிர்வாகிகளுக்கும் தெரிந்திருக்கிறது. பஸ் கட்டணத்தை அதிகரித்து, ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் மக்களை காங்., அரசு இன்னும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ