உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலையோர வீட்டுக்குள் புகுந்தது கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி

சாலையோர வீட்டுக்குள் புகுந்தது கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி

நாசிக்: மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு வீட்டினுள் வேகமாக சென்ற கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு கல்வான் தாலுகாவில் உள்ள கோலாப்பூர் பாட்டாவில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.தகவல் அறிந்த கல்வான் போலீசார் கூறியதாவது:மாநிலத்தின் சாட்டனாவில் உள்ள நாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நாசிக்கில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, தங்களின் வீட்டிற்கு திரும்பும் போது, அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நாசிக்-கல்வான் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் உள்பட 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்தவர்கள் ஷாய்லா வசந்த பதன் 62, அவரது மகள் மாதவி மேத்கர் 32, அவரது பேத்தி திரிவேனி மேத்கர் 4, அவரது உறவினர் சர்லா பாலசந்திர பதன் 50, டிரைவர் கலிஹ் மஹமூத் பதன் 50, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேத்கரின் 12 வயது மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் மகனும் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர்களது உறவினர் பாலசந்தர பதன் 52, பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூன் 05, 2025 20:28

விபத்து ஏற்படுத்தினால், குறுகிய கால சிறைக்கு பின் வழக்கு, விசாரணை, ஜாமீன், அபராதம் , தண்டனை போன்றவை.


A P
ஜூன் 05, 2025 17:44

இந்தக் கருத்தில் குழப்பங்கள் ஏராளம். விஷயத்தை நேரடியாகச் சொன்னால் நன்கு விளங்கும். கமலஹாசன் பேசுவது போல உள்ளது.


GMM
ஜூன் 05, 2025 17:17

வாகனம் ஓட்டி மரணம் என்றால் உடன் கைது. மற்றும் ஒரு ஆண்டு சிறை. பின் சட்டபடி ஆயுள் அல்லது மரண தண்டனை. நேருக்கு நேர் மோதல் இருவருக்கும் உடன் 5 ஆண்டுகள் தண்டனை. பின் புறம் இடித்து விபத்து 2 ஆண்டு தண்டனை. முந்தி செல்லுதல் விபத்து 5 ஆண்டுகள் தண்டனை. கண்ட இடங்களில் நிறுத்தம் மூலம் விபத்து என்றால், நிறுத்தியவருக்கு உடன் ஓராண்டு சிறை. மொபைல் போட்டா போன்ற சான்று போதும். உடல் ஊனம் ஏற்படுத்தினால் அரை ஆயுள் தண்டனை. போலீஸ், வக்கீல் சிரமம், அதிகாரம் குறைக்க வேண்டும். சிறை தண்டனை கட்டாயம். குறுகிய கால சிறைக்கு பின் தான் வழக்கு, ஜாமீன், விடுதலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை