உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கு எதிராக அவதுாறு கருத்து: லாலு மகன் மீது வழக்குப்பதிவு

பிரதமருக்கு எதிராக அவதுாறு கருத்து: லாலு மகன் மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரதமர் மோடியின் பீஹார் பயணத்தை விமர்சித்து, 'ஓட்டுத் திருட்டு' தொடர்பாக அவதுாறு பரப்பிய அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது மஹாராஷ்டிராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பீஹார் சென்றார். சுகாதாரம், மின் சாரம் உட்பட பல்வேறு துறைகளில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். பிரதமரின் பீஹார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் விமர்சித்துஇருந்தார். போலி வாக்குறுதிகளை தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து, மஹாராஷ்டிராவின் பா.ஜ., - எம்.எல்.ஏ., மிலிந்த் ராம்ஜி நரோடே, கட்ஜிரோலி போலீசில் புகார்அளித்தார். இதையடுத்து, தேஜஸ்வி மீது, பல்வேறு பிரிவுகளில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு பதிலளித்துள்ள அவர், ''இப்போதெல்லாம், போலி வாக்குறுதி என்ற வார்த்தையை சொல்வதும் குற்றமாகிவிட்டது. வழக்குப் பதிவு செய்வதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம். உண்மையை பேச எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் உண்மைக்கு அஞ்சுகின்றனர்,'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஆக 24, 2025 11:57

அப்பா நான்கு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று கோர்ட் உதவியால் ஜாமீனில் இருக்கிறார். அப்படிப்பட்ட கிரிமினல் தலைமையில் ஒரு கட்சி செயல்பட நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது?


ஆரூர் ரங்
ஆக 24, 2025 11:55

மின்னணு வாக்குப்பதிவு வருவதற்கு முன்பு இவரது கட்சி ஆட்சியில் வாக்குச்சாவடிகளில் புகுந்து வாக்குச்சீட்டுகளில் மொத்தமாக முத்திரை குத்திப் போட்டு விடுவார்கள். வாக்காளர்பட்டியலில் பல தலித் தெருக்கள் இருட்டடிப்பு. இதையும் மீறி பட்டியலினமக்கள் வாக்களித்தால் வாக்குப் பெட்டிக்குள் மையை ஊற்றி விடுவார்கள். வாக்குச் சாவடிக்கு தீ வைப்பது. வாக்குப் பெட்டிகளை ஆற்றில் போடுவது என அராஜகத்தின் உச்சம். இப்போ மற்றவர்களை திருடன் என்கிறார்.


srinivasan
ஆக 24, 2025 11:55

மாடு திங்கும் உணவில் கூட கைவைத்த உன் குடும்பத்துக்கு பேச அருகதை உள்ளதா?


தீவன ஊழல்
ஆக 24, 2025 10:20

யாதவர் என்ற சாதி பெயரை வைத்தே அரசியல் செய்யும் உங்க ஓட்டு திருட்டு கும்பல் மாட்டுத் தீவனம் ஊழல் செய்து சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து நாடகம் ஆடும் கேவல மனிதர்கள்


பேசும் தமிழன்
ஆக 24, 2025 08:44

ஊழல்.... திருட்டு என்றாலே.... உன் அப்பா லாலுபிரசாத் யாதவ் மற்றும் இண்டி கூட்டணி ஆட்கள் தான் நியாபகத்துக்கு வருவார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 07:42

வாரிசு என்ற ஒரு தகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டம், மக்கள் எப்போது விழிப்பார்கள் அன்றே இவரது கொட்டம் அடங்கும்


Premanathan S
ஆக 24, 2025 11:44

இந்திய மக்களுக்கு ஊழல்வாதிகளையே பிடிக்கும் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது


Padmasridharan
ஆக 24, 2025 05:47

போலி வாக்குகள் என்றால் தற்பொழுது லட்சக்கணக்கில் ஆட்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அப்படியென்றால் கடந்த வருடங்களில் இவர்களெல்லாம் ஓட்டு போட்டிருப்பார்கள் அல்லவா சாமி. அதைத்தான் இவர்கள் கூறுகிறார்களோ என்னவோ.


Kasimani Baskaran
ஆக 24, 2025 05:08

இது போல் வழக்குப்போட்டால் தமிழகத்தில் ஏராளமாக போடலாம்.


புதிய வீடியோ