உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். சில ஆண்டுக்கு முன் பீஹார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. தகவல்கள் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன. உடனே தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், மத்திய அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று (செப்.,02) நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்., பாட்டி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நாங்க தலையிடமாட்டோம்!

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஜாதிவாரி கணக்கெடுப்பை அவ்வப்போது நடத்த வேண்டும் என இந்திரா சகானி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார். வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், ' ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
செப் 02, 2024 16:23

உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பு. சாதி யென்றால் என்னவென்று தெரியாதவர் களெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கேட்பது அவர்களுடைய நாகரீகத்திற்கும் மாந்தர்தன்மைக்கும் கொஞ்சமும் அழகல்ல. சாதியைப்பற்றி மறைமலை அடிகளார் மிகத் தெளிவாக தன் நூலில் சொல்லியுள்ளார். சாதி சுத்த தமிழ்ச் சொல். சாதிவேறுபாடுகளின் உயர்வு தாழ்வுப் பற்றி மெய்யறிவாளர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். நம் அன்றாட வாழ்க்கைக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமு மில்லை. இதற்கும் அறிவியலுக்கும் எந்த தொடர்புமில்லை. சாதி என்ற நல்ல வார்த்தையின் அழகின் பெயரை நாம் பாழாக்கிவிட்டோம். நம் உண்மையான வரலாற்றை நாமெல்லோரும் புரட்டிப் பார்க்கவேண்டும் . நமக்குள்ளே உள்ள உயர்வு தாழ்வு வேறுபாடுகளை களைவோம்


Abdul Rawoof
செப் 02, 2024 16:47

ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் நோக்கம் அனைவரும் சமம் என்பதற்காக அல்ல அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே நாட்டின் அனைத்து உயற்பதவியில் இருப்பது அம்பலப்பட்டுவிடும் அதனால்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தடுக்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை


gmm
செப் 02, 2024 15:02

மத்திய அரசு அதிகார எல்லைக்கு உட்பட்டது சாதி வாரி கணக்கெடுப்பு என்று தெரிந்தும் உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்க வேண்டும். மாநிலம் சாதி வெறி கணக்கெடுப்பு எடுக்க அதிகாரம் இல்லாத போது, நீதிமன்றம் ஏன் தடை செய்ய முடியவில்லை. கட்டணம் தான் மக்கள் மாநிலங்களுக்கு செலுத்துவர். பாதுகாப்பு புரியும் மத்திய அரசுக்கு தான் வரி. மாநில நிர்வாகத்தை மாநில அரசாக மாற்றி வருவது யார்? மாவட்ட அரசை ஏன் உருவாக்க முடியாது?


சமீபத்திய செய்தி