உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் ஜாதி பாகுபாடு: தீர்வு காண மத்திய அரசு உத்தரவு

சிறையில் ஜாதி பாகுபாடு: தீர்வு காண மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிறையில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்க தீர்வு காணும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சிறைகளில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து சிறை விதிகளையும் மூன்று மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்றும், கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:சிறை கைதிகளின் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த பிரச்னையை தீர்க்க, மாதிரி சிறை கையேடு - 2016, மாதிரி சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் - 2023 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, சிறையில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு, வகைப்பாடு செய்யப்படுவதில்லை என்பதை சிறை நிர்வாகத்தினர் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். மேலும், ஜாதி அடிப்படையில் சிறை கைதிகளுக்கு வேலைகள் வழங்கக் கூடாது. சிறையில் உள்ள சாக்கடை அல்லது செப்டிங் டேங்க்கை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவுகளை சிறை நிர்வாகத்தினர் தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 02, 2025 08:00

முதல் குடிமகனிலிருந்து ஜாதியை வெச்சுதான் அப்பாயிண்ட்மெண்ட் நடக்குது. அதை வெச்சு இட்டு பொறுக்கறாங்க. ஜாதி பெயரை பின்னாடி வெச்சுக்கிட்டு அரசியல் நடத்தறாங்க. நான் தாழ்ந்த ஜாதின்னு சொல்லி இட ஒதுக்கீட்டுக்கு போராடறாங்க. ஜாதி எப்பிடி ஒழியும்?


Kasimani Baskaran
ஜன 02, 2025 08:23

அப்ப காங்கிரஸ் ஜாதிப்பிரச்சினையை தீர்க்கவில்லையா கோப்பால்? தீம்க்கா கூடவா தீர்க்க முடியல? இந்த லட்சணத்தில் பெரியார் ஜாதியை ஒழித்துவிட்டார்ன்னு மரண உருட்டுவேற உருட்டிக்கொண்டு ஒரு கோஷ்டி திரிகிறது. ஜாதியை ஒழிக்க ஒரே வழி இடஒதுக்கீட்டை இரத்து செய்து ஜாதிச்சான்றிதழ்கள் செல்லாது மட்டுமே தீர்வு. ஆனால் அதை செய்ய முடியாது.


N.Purushothaman
ஜன 02, 2025 09:37

மெனக்கெட்டு தொட்டி மேல ஏறி அந்த தண்ணியில அசிங்கம் பண்ணின புறம்போக்கை இது நாள் வரை கைது செய்யாமல் இருப்பது கூட ஜாதி வெறி காரணம் தானே .....


சமீபத்திய செய்தி