உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி வாரி கணக்கெடுப்பு; மத்திய அரசுக்கு உதவ தயார் : ராகுல் பேட்டி

ஜாதி வாரி கணக்கெடுப்பு; மத்திய அரசுக்கு உதவ தயார் : ராகுல் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை வடிவமைக்க உதவ தயாராக உள்ளோம்,'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

புரியவில்லை

புதுடில்லியில் நிருபர்களைச் சந்தித்த ராகுல் கூறியதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த செய்வோம் என பார்லிமென்டில் நாங்கள் தெரிவித்து இருந்தோம். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள சுவற்றை அகற்றுவோம் எனக்கூறி இருந்தோம். நான்கு ஜாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி கூறி வந்த நிலையில், 11 ஆண்டுக்கு பிறகு அறிவிப்புக்கு பின்னால் என்ன உள்ளது என புரியவில்லை.

வித்தியாசம்

அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், அதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். எப்போது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது முதல் நடவடிக்கை. ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா மாநிலம் முன்மாதிரியாக உள்ளது. அதற்கான விரிவானதிட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை தயாரிக்க நாங்கள் உதவ தயாராக உள்ளோம். பீஹார் மற்றும் தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நிறைய வித்தியாசம் உள்ளது.

விடையில்லை

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்படி பல முறை மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளேன். ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்படவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது முதல்படி. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் புதிய வளர்ச்சி திட்டத்தை கொண்டு வருவதே எங்களின் கொள்கை ஆகும். இட ஒதுக்கீடு மட்டும் அல்லாமல் மத்திய அரசிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

தனியார் கல்வி நிறுவனங்களில்

ஓபிசி, தலித்கள், ஆதிவாசிகள் ஆகியோர் நாட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன?ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதனை தாண்டி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை மீண்டும் கூற விரும்புகிறேன். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 15(5). இது ஏற்கனவே சட்டமாகி உள்ளது. இதனை எப்போது பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு எப்போது செயல்படுத்தும் என தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

நடவடிக்கை வேண்டும்

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், அதற்கான விலையை கொடுக்க வேண்டும். இந்தியாவிற்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என அவர்கள் எண்ண வேண்டும். அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிப்பார்கள். மோடி நவடிக்கை எடுக்க வேண்டும். அது தெளிவானதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். அவர் எந்த காலக்கெடுவுக்குள் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு ராகுல் கூறினார். முன்னதாக, பஹல்காமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M S RAGHUNATHAN
மே 02, 2025 07:34

முதலில் நீ எந்த மதம், ஜாதி. மற்ற மதத்தவர் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதியை குறிப்பிட்டால் பதிவு செய்ய வேண்டுமா. மற்ற மத தலைவர்கள் அவர்கள் மாதத்தில் ஜாதி கிடையாது என்று உரக்க கூவுகிறார்களே. ஆகவே வேற்று மதத்தவர்கள் ஜாதி குறிப்புடக் கூடாது என்று அரசாணை வெளியிட வேண்டும். கணக்கு எடுப்பவர்களிடம் ஜாதி சான்றிதழ் கொடுத்தால் தான், அவர்கள் இந்துவாக இருப்பின் பதிய வேண்டும். அத்துடன் மதம் மாறமாட்டோம் அப்படி மாறினால் எங்கள் ஜாதி சான்றிதழை உரிய அலுவலகத்தில் குடுத்து ரத்து செய்து விடுவோம் என்று உறுதி அளிக்க வேண்டும்.


சாமானியன்
மே 01, 2025 08:18

ஜாதிகட்கு அப்பாற்பட்டவர் என பதிவு செய்ய முடியுமா ? எனக்கு அரசாங்கம் தரும் ஜாதி சலுகைகள் எதுவுமே வேண்டாம் என பதிவு செய்ய முடியுமா? பிராமணர்கட்கு சட்டமன்றத்தேர்தலில் நின்று ஜெயிக்க எந்த கட்சியாவது உதவி செய்யுமா? நான் ஒரு பைசா கூட அரசாங்க பணத்தை கையாடல் செய்ய மாட்டேன் என பொது வெளியில் சத்தியம் செய்ய முடியுமா ?


c.mohanraj raj
மே 01, 2025 00:13

ஐயா தங்களது ஜாதியை பற்றி தெரிந்து கொள்ளலாமா ? சூப்பர் கம்ப்யூட்டர் குழம்பிவிடும்


Bhakt
ஏப் 30, 2025 23:28

பப்பூஜி நீங்க இத்தாலியன் பிரிட்டிஷ் கவுர் பிராமணர் தானே?


Rajah
ஏப் 30, 2025 22:45

முதலில் சட்டவிரோத குடியேறிகளை கணக்கெடுத்து அவர்களை நாடு கடத்திய பின்னர் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும்.


பேசும் தமிழன்
ஏப் 30, 2025 22:33

... வேண்டாம்


HoneyBee
ஏப் 30, 2025 22:09

அதுசரி. எனக்கு ஒன்று புரியவில்லை.. ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடந்தால் நாட்டுக்கு என்ன லாபம். ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் மாநில ஜாதி கட்சிகள் தான் தன் பலம் இவ்வளவு என்று பில்டப் கொடுத்து அட்டகாசம் செய்யும். ஜாதியை ஒழிக்க தெரு பெயர்கள் மற்றும் புத்தகத்தில் உள்ள ஜாதியை எல்லாம் நீக்க வேண்டும் என்று சொல்லி இப்போது ஜாதியை வைத்து நாட்டை குட்டிச் சுவறாக்க போகிறது. அவ்வளவு தான் இதன் பலன்


velayutham Rajeswaran
ஏப் 30, 2025 21:28

ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி சொல்லல் பாவம் ஜாதி கணக்கெடுத்து அரசாங்கம் என்ன செய்ய போகிறது முதலில் இந்தியாவில் உள்ள வெளி நாட்டினர் கணக்கை எடுக்கவும்


jaikannan kannan
மே 01, 2025 05:30

தாங்கள் எந்த மதம் எந்த சாதி எந்த நாடு


வாய்மையே வெல்லும்
மே 01, 2025 06:38

சார் பாயிண்டை பிடிச்சிட்டேங்க. கணக்கெடுப்பே இந்த திருட்டு பயல்களை பிடிக்கத்தான் .. இது தெரியாம நம்மூரு கூமுட்டைகள் எங்களால் தான் இது நடந்தேறியது என மார்தட்டி பேசுவது வேடிக்கை. கணக்கெடுப்பு லேயே பாதி திருட்டு பசங்க மட்டுவானுங்க. அவங்களை நாடுகடத்த இது உதவியாக இருக்கும். அல்லேலூயா / சம்பிராணிபாய்ஸ்.. உங்களுக்கு வயிற்றில் புளிக்கரைசல் வருவது புரியுது. நிறைய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். பாஜக மாஸ்டர் ஸ்ட்ரோக் என இந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம்


முக்கிய வீடியோ