உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; ராகுல் திட்டவட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; ராகுல் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; நடத்திக் காட்டுவோம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராகுல் கூறியியிருப்பதாவது: தெலுங்கானாவில் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஓ.பி.சி., இட ஒதுக்கீடு அதிகரிப்பு வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓ.பி.சி., சமூகத்தினரின் எண்ணிக்கை ஏற்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சம பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் 42% இட ஒதுக்கீட்டுக்கான மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளுடன் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்திற்கான நியாயமான உரிமை ஜாதிவாரி கணக்கெடுப்பு.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா காட்டிய வழி ஒட்டுமொத்த நாட்டிற்கு தேவையானது. இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும். நடத்திக் காட்டுவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

vns
மார் 19, 2025 01:43

பெண், மகன், அம்மா மூன்று பேர் ஒரே குடும்பத்தில் இருந்து பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள். ஏன் மகள் அம்மா இருவர் பதவி விலகி அந்த இரு உறுப்பினர் பொறுப்புகளை இரண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு கொடுக்கக்கூடாது?


Anu Sekhar
மார் 19, 2025 00:07

இந்த மாதிரி பழைய மாவை அறைச்சுட்டு இருங்க. வேற ஒன்னும் அமெரிக்கா விலிருந்து கிடைக்கலியா


R.Subramanian
மார் 18, 2025 20:19

ராகுல் காந்தி சொல்வதன் அர்த்தம் இந்திய மக்களை ஜாதி அடிப்படையில் பிரித்தே தீர வேண்டும் அப்போது தான் மக்கள் ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணையாமல் பிரித்து வைக்க முடியும் DIVIDE AND CAPTURE POWER


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 18:50

இன்னும் ஆயிரம் வருடத்திற்கு ராகுல் உயிரோடு இருந்தால், ஜெயித்து வந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக்கொள். ஏனனில் இன்னும் ஆயிரம் வருடத்திற்கு பிஜேபி தான் இந்தியாவை ஆளும்.


SRIRAM
மார் 18, 2025 18:47

பார்த்தால் எனக்கு கிளி ஜோசியம் சொல்லும் ஆள் போல உள்ளது... மோடி அய்யாவிற்கு வந்துள்ள சீட்டு.....


Mr Krish Tamilnadu
மார் 18, 2025 18:03

ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்ற இந்திய மாநிலங்களுக்கு எப்படியோ, தமிழகத்திற்கு மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக காங்கிரஸ்- சில் கணக்கெடுப்பு எடுத்து, அதன் அடிப்படையில் பதவியை ஒதுக்கி பார்த்தால், எவ்வளவு பெரிய தேனீ கூட்டை சுத்தப்படுத்த ஆசைப்பட்டோம் என்பது ராகுல் அவர்களுக்கு புரியும். எதிர்கால சமுதாயம் மாற்று சான்றிதழ் களில் மறைமுகமாக ஜாதி குறிப்பிட படுவதால் ஏசி, பிசி என மறந்து பழகுகின்றன. தமிழக அரசியல் தெளிவாக உள்ளது, மேல்தட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக செளகரியமாக வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் கீழ்தட்டுக்கு வரும் வரை இந்த இட ஒதுக்கீடுகள் தொடரும்.


Mr Krish Tamilnadu
மார் 18, 2025 18:02

ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்ற இந்திய மாநிலங்களுக்கு எப்படியோ, தமிழகத்திற்கு மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக காங்கிரஸ்- சில் கணக்கெடுப்பு எடுத்து, அதன் அடிப்படையில் பதவியை ஒதுக்கி பார்த்தால், எவ்வளவு பெரிய தேனீ கூட்டை சுத்தப்படுத்த ஆசைப்பட்டோம் என்பது ராகுல் அவர்களுக்கு புரியும். எதிர்கால சமுதாயம் மாற்று சான்றிதழ் களில் மறைமுகமாக ஜாதி குறிப்பிட படுவதால் ஏசி, பிசி என மறந்து பழகுகின்றன. தமிழக அரசியல் தெளிவாக உள்ளது, மேல்தட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக செளகரியமாக வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் கீழ்தட்டுக்கு வரும் வரை இந்த இட ஒதுக்கீடுகள் தொடரும்.


RATNAM SRINIVASAN
மார் 18, 2025 17:47

முதலில் நீ எந்த ஜாதி என்று சொல்லு


Anand
மார் 18, 2025 17:19

நீ வேண்டாம் போ...


என்றும் இந்தியன்
மார் 18, 2025 16:53

குழந்தாய் பின் எதற்கு பிஜேபி பிரிவினை அரசியல் செய்கின்றது என்று தினம் தினம் உளறுகின்றாய்??/ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிரிவினை காட்டுவது. அந்த ஜாதிவாரிக்கணக்கெடுப்பில் இந்து ஜாதிப்பிரிவு, முஸ்லீம் ஜாதிப்பிரிவு 142 ஜாதிகள் கிறித்துவ ஜாதிப்பிரிவு 124 ஜாதிகள் என்று பிரித்து மேயவேண்டும் வெறும் இந்து ஜாதி கணக்கெடுப்பு மட்டும் , அவசியமற்றது


சமீபத்திய செய்தி