உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில், கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய - பாக்., எல்லையில் பணிபுரிந்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mavus9u0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.இவர், ஏப்ரல் 23ம் தேதி தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்ற போது, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் இந்தியா கோரிக்கையை ஏற்று, இன்று (மே 14) காலை 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வழியாக அழைத்து வந்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இந்த தகவலை எல்லையோர பாதுகாப்பு படை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஏப்ரல் 23ம் தேதி கைது செய்யப்பட்ட பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்கு பிறகு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
மே 14, 2025 16:41

ஜெய்சல்மேர் பகுதியில் பாகிஸ்தானிய ரேஞ்சர் பிடிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். எல்லை பகுதியில் பல கிலோமீட்டர்கள் BSF வீரர்கள் நடக்கின்றனர். அது தவிர பாகிஸ்தானிய மற்றும் இந்திய எல்லையை கண்டுபிடித்து அறிவது மிகவும் கடினம். ஒரு வீரர் தனிமையில் இருக்கும் போது பாகிஸ்தானிய ரேஞ்சர்கள் பிடித்து செல்வது அதிகம்.


chennai sivakumar
மே 14, 2025 14:16

எல்லை எது என்று தெரியாமல் கூட ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் இருப்பாரா? எங்கேயோ இடிக்குது


Arunkumar,Ramnad
மே 14, 2025 15:46

இரவில் உன்னை கொண்டு போய் உன் பக்கத்து ஊரில் விட்டால் நீ தடவி தடவி நேராகப் போய் பாழுங் கிணற்றில் விழுவாய் அது போன்ற சூழ்நிலையில் அந்த வழி தவறிய நம் வீரனை எண்ணிப் பார் உண்மை புரியும்


ஆரூர் ரங்
மே 14, 2025 15:55

எல்லையில் பல இடங்களில் நில அமைப்பால் வேலி அமைத்தல் சாத்தியமில்லை. முக்கியமாக சிற்றாறுகள், குன்றுகள் குறுக்கிடும் இடங்கள்.


Karthik
மே 14, 2025 13:50

செய்தியை முழுமையாக மீண்டும் வாசியுங்கள் பிரசன்னா.. இந்த பூரண குமார் 22 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்திடம் கைதியாக இருந்துள்ளார். அதாவது கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காமில் அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மறுநாள் இவர் எல்லையோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தெரிந்தோ தெரியாமலோ இவர் இந்திய எல்லையை கடந்து ஆடு மேய்க்கும் நபர்களுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். அதனால் தான் பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது.


shanmugam subramanian
மே 14, 2025 13:25

மனிதம் மகிழ்வுறட்டும் மரிக்கவில்லை. அவர் பணி செவ்வனே தொடர நல்வாழ்த்துகள். மனம் மற்றும் உடல் நலம் முதலியவற்றில் அரசு அன்னாருக்கு உதவிடல் வேண்டும்.


SUBBU,MADURAI
மே 14, 2025 12:26

Pakistan handed over BSF jawan Purnam Kumar Shaw to India. He was captured by the Pakistan Rangers in April 2025, after accidentally crossing into Pakistani territory while on operational duty in Ferozepur sector. Welcome home, soldier.


Karthik
மே 14, 2025 12:12

இந்த பூரண குமார் எதற்காக எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றார் என்பதை தீவிரமாக விசாரணை நடத்தி இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கண்ணன்,மேலூர்
மே 14, 2025 12:25

துரோகிகள் மீதுதான் முதலில் தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Prasanna Krishnan R
மே 14, 2025 12:42

பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிடும்போது அவர் பிடிபட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை