வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீங்க என்னசொன்னாலும் டொனால்டு டக்குக்குத்தான் நோபல் பரிசு
போச்சுடா, அந்த நோபல் பரிசு வாங்க நினைக்கும் டிரம்புக்கு எதிரா கிளம்பிட்டாங்க. பார்க்கலாம் யாருக்கு அந்த நோபல் பரிசு கிடைக்கும் என்று.
புதுடில்லி: இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்த முயற்சிக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 12 நாட்களுக்கு மேலாக நீடித்த போரை நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டன. இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் தங்களது வான்பரப்பை மீண்டும் திறந்துவிட்டுள்ளன. இந்நிலையில் மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை:மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.ஒட்டுமொத்த மற்றும் நிலையான பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறோம். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்தம் மற்றும் அதைக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் கத்தார் வகித்த பங்கு பற்றிய அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம்.பிராந்தியத்தில் உள்ள பல மோதல்களைத் தீர்த்துத் தீர்ப்பதற்கு அமைதி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.இந்த முயற்சிகளில் இந்தியா தனது பங்கை வகிக்கத் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.இவ்வாறு ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கையில் கூறியுள்ளார்.
நீங்க என்னசொன்னாலும் டொனால்டு டக்குக்குத்தான் நோபல் பரிசு
போச்சுடா, அந்த நோபல் பரிசு வாங்க நினைக்கும் டிரம்புக்கு எதிரா கிளம்பிட்டாங்க. பார்க்கலாம் யாருக்கு அந்த நோபல் பரிசு கிடைக்கும் என்று.