உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5ம் தலைமுறை போர் விமானங்கள்; தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

5ம் தலைமுறை போர் விமானங்கள்; தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xo1nb0qr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5ம் தலைமுறை போர் விமானம், 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சமீர் வி காமத் கூறுகையில், 'இந்தத் திட்டத்திற்கு 2024ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5ம் தலைமுறை விமானங்களை பயன்பாட்டுக் கொண்டு வர 10 ஆண்டுகளாகும். 4ம் தலைமுறை இன்ஜினான காவேரியில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். தற்போது எங்களின் இலக்கு 6ம் தலைமுறை இன்ஜின் தான்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Keshavan.J
மே 27, 2025 20:42

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வயிறுல கட முடா, இந்தியாவில் இந்த பியிட்டர் ஜெட்டு வந்தா அவங்களுக்கு ரன்னிங் பேதி தான்.


Varadarajan Nagarajan
மே 27, 2025 14:33

மிக குறிகிய காலத்தில், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யவேண்டுமென்ற இலக்கோடு செயல்படவேண்டுமானால் தனியார் பங்களிப்பு மிக மிக அவசியம். ஒருசில அரசு நிறுவனங்களை தவிர மற்ற அரசு நிறுவனங்கள் உற்பத்தித்திறனிலும், தொழில் வேகத்திலும் தற்காலத்திற்கு ஈடுகொடுக்கமுடியவில்லையென்பது இதுவரை நாம்கண்டது. பல கார்பொரேட் நிறுவங்கள் இதுபோன்ற ராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்யவும், கப்பல் கட்டுவதற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. அரசியல் விமர்சங்களைப்பற்றி கவலைகொள்ளாமல் நமது அரசு அவற்றை ஊக்கப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடந்த காலத்தில் கொரோன தடுப்பூசியை மிக குறுகிய காலத்தில் உள்நாட்டிலேயே கண்டுபிடித்து உற்பத்தியும் செய்து நாம் சாதனைப்படைத்துள்ளோம்.


நாஞ்சில் நாடோடி
மே 27, 2025 14:03

வாழ்க பாரதம்...


Barakat Ali
மே 27, 2025 13:47

நவீன தொழில் நுட்பம் ........ அதன் காரணமாகவே அரசு சார்ந்த HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் அவசரத்துக்கு தயாரிக்க முடியாது .... இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பு அவசியம் .....


Ramesh Sargam
மே 27, 2025 12:55

தனியார் என்றவுடன் எதிர்க்கட்சியினர் அம்பானி, அதானி இவர்களுக்கு சலுகையா என்று முட்டாள்தனமாக கேள்வி கேட்பார்கள். யாருக்கு அருகதை இருக்கிறதோ அவர்கள் உடன் என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.


புதிய வீடியோ