உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது நிதியில் உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க மத்திய அரசு தடை

பொது நிதியில் உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க மத்திய அரசு தடை

புதுடில்லி: தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் அமைச்சகங்கள் அல்லது அரசு துறைகளுக்கு இடையே பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். இது மட்டுமின்றி, அரசு உயர் அதிகாரிகளுக்கும் பொது நிதியில் இருந்து பண்டிகை காலங்களில் பரிசுகள் வாங்கிக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது. அடுத்த மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் கடந்த 19ல் அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை இணை செயலர் பி.கே.சிங் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பொது நிதியை பயன் படுத்தி, தீபாவளி அல்லது பண்டிகை காலங்களில் அமைச்சகங்கள் அல்லது துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் இடையே பரிசுப்பொருட்களை பரிமாறக்கூடாது. இதே போல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கவோ, பண்டிகை தொடர்பான செலவினங்களையோ பொதுநிதியில் இருந்து செலவிடக் கூடாது. தேவையற்ற செல வினங்களை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

skrisnagmailcom
செப் 24, 2025 12:01

இருக்கவே இருக்காங்க கான்ட்ராக்டர் கள் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்


சிட்டுக்குருவி
செப் 24, 2025 06:30

அரசியல் அமைப்பில் மக்கள் வரிப்பணம் மக்கள் சேவைக்காக செலவிடும் நியாயமான வழிமுறைகளை குறிப்பிடவில்லை .அதனால் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் விருப்பம்போல் தங்களுக்காகவும் தங்கள் கட்சி விளம்பரத்துக்காகவும் ,சிலைகள் ,நினைவு சின்னங்கள் அமைப்பதற்கும் செலவிடுகின்றார்கள் .இதைப்போக்க ethical spending act இந்திய அளவில் கொண்டுவரவேண்டிய அவசியம் உள்ளது .இதை மத்திய அரசு உடனே ஆராயவேண்டும் .


Ram
செப் 24, 2025 05:57

அப்போ மக்களிடம் லஞ்சம் பெற்று செய்வார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை