உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: கனடாவுடனான தூதரக உறவை இன்று (அக்.14) இந்தியா திரும்ப பெற்றதையடுத்து மேலும் ஆறு தூதரக அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgw0874h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை திரும்ப பெறுவதாக இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இன்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கனடா தூதரக அதிகாரிகள் 6 பேர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது. அவர்கள் விவரம்:1) ஸ்டீவார்டு ரோஸ் வீலர் : தூதரக அதிகாரி2) பேட்ரிக் ஹீபர்ட்: துணை தூதரக அதிகாரி3) மேரி கேத்ரின் ஜோலி: முதன்மை செயலர்.4) இயான் ரோஸ் டேவிட் டீரிட்ஸ்: முதன்மை செயலர்5) ஆடம் ஜேம்ஸ் சூயிப்கா: முதன்மை செயலர்6) பவுல் ஒர்ஜூலையோ: முதன்மை செயலர் ஆகியோர் வரும் 19ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
அக் 15, 2024 08:37

தீவிரவாத பிரிவினைவாத சக்திகளின் கூடாரமாக கனடா மாறி உள்ளது ...இதற்கான விலையை அந்நாடு வெகு விரைவில் கொடுக்கும் ....கனடா நாட்டில் பிரிவினை கோஷம் எழும் போது அதன் வலி அப்போது புரியும் ...


Kasimani Baskaran
அக் 15, 2024 05:57

பல நாட்டு குடியுரிமை என்பது பல பக்கங்கள் கூர்மையான கத்தி என்பதை கனடா ஒரு பொழுதும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. சீக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டும் கன்னடா தீவிரவாத ஆதரவு நாடு என்று உலகமே பிரகடனப்படுத்தும் நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


J.V. Iyer
அக் 15, 2024 05:09

அப்படிப்போடு... போடு.. போடு.. ஜஸ்டினால் கனேடிய மக்களுக்கு மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து இறக்கப்படவேண்டும்.


RAJ
அக் 15, 2024 00:29

ட்ரூடோக்கு நேரம் சரி இல்ல. இப்போ அடிச்சு விரட்டுவாங்கனு நினைக்கிறேன்..


Sivagiri
அக் 14, 2024 23:44

கரெக்டு கனடாவே அர்பன் நக்சல் நாடாக அகி விட்டது போல , மற்றொரு செலென்ஸ்கி போல


முக்கிய வீடியோ