உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரு எழுதிய கடிதங்களை கொடுங்க ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்க ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களை அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டில்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது.

அருங்காட்சியகம்

கடந்த 1971ல், நேருவின் வாரிசான, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதற்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். மொத்தம், 51 பெட்டிகளில் நேரு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில், பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்களும் அடங்கும்.ஜெயபிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசிப் அலி, பாபு ஜகஜீவன் ராம் போன்ற தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவற்றில் அடங்கும்.கடந்த 1984ல் இந்தி ராவின் மறைவுக்குப் பின், நேருவின் வாரிசாக சோனியா மாறினார். கடந்த 2008ல், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கிய, 51 பெட்டிகளில் உள்ள பொருட்களை அவர் திரும்பப் பெற்றார். தற்போது அவரது தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன.

ஆவணங்கள்

தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, நேரு தொடர்பான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் கடந்தாண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியது.ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, நேரு குடும்பத்தின் மற்றொரு வாரிசான, சோனியாவின் மகன் ராகுலுக்கு, மத்திய அரசு தற்போது கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் அறக்கட்டளையில், 29 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒருவரான வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வான் காத்ரி, காங்கிரசின் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை, தங்களுடைய தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன. இவை வரலாற்று சிறப்புமிக்கவை. இவை தொடர்பான தகவல்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த உதவ வேண்டும்.நேருவின் கடிதங்கள் உள்ளிட்டவை, உங்களுடைய குடும்பத்தின் தனிப்பட்ட உரிமையாகும். இருப்பினும், வரலாற்று ஆய்வுகள் மற்றும் எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த கடிதங்கள் உள்ளிட்டவற்றை, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்க வேண்டும் அல்லது டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thiyagarajan S
டிச 22, 2024 08:33

அறிவிலி என்று உன்னைத்தான் சொல்ல வேண்டும்...


ஆரூர் ரங்
டிச 17, 2024 11:04

எழுதியவற்றைக் கொடுக்க மனம் வருமா?


SIVA
டிச 17, 2024 10:16

நேரு யாருக்கோ லெட்டர் எழுதி உள்ளார், அந்த கடிதம் யாருக்கு எழுதினொரா அவரிடம் தான் இருக்க வேண்டும், அல்லது அருங் காட்சியகத்தில் இருக்க வேண்டும்...


பாரதி
டிச 17, 2024 09:42

நேருவின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்கினால் நாடு நல்லா இருக்கும்


அப்பாவி
டிச 17, 2024 08:39

நீங்க ஸ்விஸ் வங்கி கணக்கு லிஸ்டைக் குடுங்களேன் பாத்துட்டு குடுத்துடறேன்.


கிஜன்
டிச 17, 2024 07:53

கோரிக்கையில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்....


Kasimani Baskaran
டிச 17, 2024 05:52

நேரு என்ற பாத்திரத்தின் முகத்திரையை கிழித்து விட வின்சி துடிக்கிறார். இதை நல்லதொரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு உண்மைகளை பாஜக அரசு வெளியிடும் என்று நம்புகிறேன்.


M Ramachandran
டிச 17, 2024 03:40

இரட்டை குட்டி உரிமை உடைய இத்தாலி குடும்பம் உண்மையான நேரு குடும்ப வாரிசு அல்ல. இந்திராவே திருமணத்திற்கு பிறகு பெரோஸ் கான் குடும்பத்துடன் தொடர்புடையவராகி விட்டார். ஆகையினால் வாரிசு இல்லாத குடும்பமாகி போனதால் இந்திய அரசு தானெ எடுத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த இத்தாலி குடும்பம் நல்ல லாபம் பார்க்கா அயல் நாடுகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள்


தாமரை மலர்கிறது
டிச 17, 2024 02:09

சாரி. நேரு எழுதிய தண்டங்கள் குப்பைத்தொட்டிக்கு சென்றுவிட்டன. அதனால் கொடுக்க இயலாது.


A Viswanathan
டிச 17, 2024 11:01

பாரதத்திற்கு எதிராக தான் கடிதம் எழுதியிருப்பார். ஆகவே அதை அருங்காட்சியகத்தில் வைக்காமல் இருப்பதே உத்தமம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை