உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கபட உள்ளனர்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 53 சதவீதமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இனிமேல் 55 சதவீதமாக இருக்கும். மத்திய அரசின் முடிவால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R sampath
மார் 29, 2025 10:49

கணக்குப்படி 2.98% தரவேண்டும். 3% ஆக்கி தராமல் 2 % கொடுத்து ஏமாற்றும் வேலை.ரயில் கட்டணம் ரூ. 172 என்றால் 175 வசூல் செய்கிறார்கள்.


Ray
மார் 29, 2025 07:42

ஜனவரிக்கு முன்பே அட்வான்ஸாக மூன்று சத்தம் என்று டமாரம் அடித்துவிட்டு பீகார் தேர்தலில் பலனிக்காது என்று தெரிந்தவுடன் இரண்டாக குறைத்த கொடுமை. நுகர்வோர் குறியீட்டுக் கணக்கெல்லாம் சொல்வது மரபு இன்று ஊடகங்கள் அதைப் பற்றியெல்லாம் சொல்லி குட்டை உடைக்க வில்லை இங்கே யார் ஒருவர் 2.98 % உயந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார் மக்கள் தெளிவாக விவரமாக உள்ளனர் ஏமாற்றமுடியாதுங்கோ


R sampath
மார் 28, 2025 22:18

2.98% தரவேண்டும். 3% ஆக்கி தராமல் 2% ஆக்கி ஊழியர்களை ஏமாற்றுகிறது அரசு.


Amar Akbar Antony
மார் 28, 2025 19:54

இந்த மாதிரி மத்தியும் மாநிலமும் கொடுத்துக்கொண்டிருந்தால் தனியார் துறையினர் என்ன செய்வர்.


சமீபத்திய செய்தி