உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!

நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதிபதி வீட்டில் பணக்குவியல் சிக்கிய விவகாரத்தில், நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணைக்குழு அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அங்கிருந்த மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான புகார்களை யஷ்வந்த் வர்மா மறுத்தார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதை ஏற்காமல் அவர் முரண்டு பிடித்தார்.அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது. இருப்பினும், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை துவங்கவில்லை. அதேசமயம், பார்லி., மழைக்கால கூட்டத்தில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது குறித்து விசாரணை குழுவை மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. விசாரணை குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajan A
ஜூலை 03, 2025 23:57

யார் யாரிடம் பணம் வாங்கினார் என்று தெரிந்தால் மற்றவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.


மனிதன்
ஜூலை 03, 2025 22:28

விளங்கும்.., இப்பத்தான் கமிட்டியவே அமைக்கிறார்களாம்...இதற்கிடையில் என்னென்ன தில்லுமுல்லு செய்திருப்பாங்களோ????


D Natarajan
ஜூலை 03, 2025 20:59

சட்டம் ஒரு இருட்டறை. சட்டம் எல்லோருக்கும் சமமில்லை. அரசியல் சாசனம் திருத்தப் படவேண்டும். நீதிபதி திருடலாம் தண்டனையே இல்லை. கேடுகெட்ட சட்டங்கள்


sankaranarayanan
ஜூலை 03, 2025 19:11

இதே விஷயம் ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு நடந்திருந்தால் அவனை கைது செய்து கடுங்காவலில் வைத்து ஊர் சிரிக்க உலை சிரிக்க பட்டி தொட்டிகளெல்லாம் அவனைப்பற்றி ஊடகங்களும் செய்திகளைப்பரப்பி அவனது வாழ்வை நாசமாக்கி விடுவார்கள் ஏனிந்த அதே சட்டம் இந்த நீதிபதிக்கு கிடையாதா இவருக்கு மட்டும் அந்நிய நாட்டின் விதி முறைகள் எதற்காக பின்பற்றப்பட வேண்டும். வெட்கப்படுகிறோம்... வேதனைப்படுகிறோம்.... இந்த ஜனநாயாக நாட்டில் எல்லோரும் சமம் என்பதே இல்லை


V RAMASWAMY
ஜூலை 03, 2025 17:16

ஏற்கனவே ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கும் மற்றொறு தீர்ப்புக்கும் பேதம். இருக்கும் அமைப்புக்கள் போதாதா, இன்னும் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு குழு ஒரு கமிட்டி என்று அமைத்துக்கொண்டே போனால் எப்போது நீதி கிடைக்கும்?


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2025 16:30

உயர் நீதிமன்ற நீதிபதி????அப்படின்னா??? நீதிபதி என்றால் அநீதிபதி என்று பார்க்கவேண்டுமா இனிமேல் வக்கீல் என்றால் திருட்டு பொய் புரட்டு தொழில் செய்பவர் என்று பார்க்கவேண்டுமா இனிமேல்


sekar ng
ஜூலை 03, 2025 14:47

ஒருவர் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளார். மற்றவர்கள் மிக உஷாராக உள்ளனர்


Iyer
ஜூலை 03, 2025 14:31

தாயும் சேயை விட மிகவும் வெட்கம் கெட்டவராக இவர் இருப்பர் போலிருக்கிறது ஆவணங்களுடன் Dr. ஸ்வாமி அவர்கள் - தாயையும் சேயையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் - இருவரும் வெட்கமே இல்லாமல் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர்


Santhakumar Srinivasalu
ஜூலை 03, 2025 14:13

இதுவே ஒரு சாதாரண குடிமகன் வீட்டில் நடந்தூல் வருமான வரித்துறை/அமலாக்கத் துறை சும்மா இருக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை