உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் காலமானார்

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் காலமானார்

புதுடில்லி: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ரோய் இன்று (நவ.,01) காலமானார். அவரது வயது 69.குடலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் காலமானார்.தெற்கு 24 பராகன்ஸ் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் ஆரம்ப கல்வியையும், கோல்கட்டாவின் பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். டில்லி பொருளாதார பள்ளி மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலையிலும் படித்த இவர், பிரசிடென்சி கல்லூரி, புனேயில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார மையம், டில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக மையம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார்.பல்வேறு கட்டுரைகள் எழுதி உள்ள இவர், 2019 முதல் நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ஆகவும் உள்ளார் . 2017 முதல் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் ஆக நியமிக்கப்பட்டார்.

இரங்கல்

பிபேக் டெப்ரோய் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி