உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா சந்திக்கும் சவால்கள்: ராஜ்நாத் சிங் பட்டியல்

இந்தியா சந்திக்கும் சவால்கள்: ராஜ்நாத் சிங் பட்டியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' உள்நாட்டில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், சட்டவிரோத அகதிகள் ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.டில்லியில் டி.ஆர்.டி.ஓ., சார்பில் நடக்கும் கண்காட்சி மற்றும் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: உள்நாட்டு பாதுகாப்பும் மற்றும் வெளிப்புற பாதுகாப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இதில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நமது பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.இந்த புதிய யுகத்தில், நாம் புது மாதிரியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். நம்முன் உள்ள சவால்களின் தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் கவனிக்கப்படும் நிலையில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், எல்லை தாண்டி வரும் சட்டவிரோத அகதிகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் ஆகிய அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறோம்.இந்தியாவிற்கு வெளியேயான பாதுகாப்பிலும் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். முன்பு, இவை வழக்கமானதாக இருந்தது. தற்போது வழக்கத்திற்கு மாறாக, நவீன போர் உத்திகள், சைபர் மற்றும் விண்வெளி சார்ந்த சவால்களையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MARUTHU PANDIAR
மார் 04, 2025 21:49

அட நீங்க ஒண்ணு , 200 ரூபாய் உ.பிஸ் களுக்கோ, அவங்கள ஏமாற்றி ஓட்டு அறுவடை செய்யும் கூட்டத்துக்கோ இதெல்லாம் எங்கேங்க புரியப் போகுது ? அத விடுங்க ,கேரளா, மே .வங்கம் , இங்கெல்லாம் யார் ஓட்டு அதிகம் தெரியுமா ?


அப்பாவி
மார் 04, 2025 21:44

யாரும் வாலாட்ட முடியாதுன்னவரு இப்போ வால்ஜளை பட்டியலிடுகிறாரு. சவால் இல்லாத வழ்க்கையே இல்லை.


Anand
மார் 04, 2025 16:11

//உள்நாட்டில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், சட்டவிரோத அகதிகள் ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது// கூடவே திருட்டு திராவிஷத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்...


என்றும் இந்தியன்
மார் 04, 2025 15:57

இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025-ம் ஆண்டு 181.74 லட்சம் கோடி இது தானே பெரிய சவால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை