| ADDED : ஆக 24, 2025 11:48 AM
புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா. இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்கள் எடுத்துள்ளார். 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்கள் எடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkqlq09k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணிக்கு இருந்தாலும், சமீபகாலமாக தேசிய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.தற்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் இந்திய அணிக்காக விளையாடிய நாட்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா நல்லா விஷயங்களுக்கும் ஒரு நாள் முடிவு இருக்கும், நன்றி,'' என குறிப்பிட்டுள்ளார்.