உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தடுத்தது; 17 ஆண்டுகளுக்கு பின் சிதம்பரம் வெளிப்படை

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தடுத்தது; 17 ஆண்டுகளுக்கு பின் சிதம்பரம் வெளிப்படை

புதுடில்லி : ''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருந்தோம். சர்வதேச நாடுகள் மற்றும் நம் வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாட்டால் முடிவை கைவிட்டோம்,'' என, முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 175 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த போது, மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. காங்கிரசைச் சேர்ந்த மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த தாக்குதலுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றார். சம்பவம் நடந்து, 17 ஆ ண்டுகளான நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்பது குறித்து, சிதம்பரம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. டில்லிக்கு வந்த அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், என்னையும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையும் சந்தித்து, 'தயவுசெய்து பாக்., மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, கேட்டுக் கொண்டார். 'இது பற்றி அரசு முடிவெடுக்கும்' என, அவரிடம் கூறினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் இருந்தது. ராணுவ நடவடிக்கை தொடர்பாக, மன்மோகன் சிங்கும் அதிகாரிகளுடன் விவாதித்தார். பாக்., மீது தாக்குதல் நடத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடந்தது. இறுதியில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளியுறவு சேவை கேட்டுக் கொண்டதால், பதிலடி கொடுக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். தடுத்தது யார்? வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டதாக காங்., மூத்த தலைவர் சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார். பதிலடி கொடுக்க அவர் தயாராக இருந்துள்ளார். ஆனால் யாரோ அவரை தடுத்துள்ளனர். சிதம்பரத்தை தடுத்தது யார்? சோனியாவா அல்லது மன்மோகன் சிங்கா? - செஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
அக் 01, 2025 06:23

இவனையெல்லாம்..... ஒன்று ரகசியம் காக்கிறேன் என்ற பெயரில் பேசாம இருக்கணும் அல்லது அப்பொழுதே சொல்லி இருக்கணும். இவ்வளவு காலம் கழித்துச் சொல்லும் இவர ....


சண்முகம்
அக் 01, 2025 05:46

பஹல்காம் படுகொலைக்கு சரியான பதிலடி கெடுக்காமல் யார் தடுத்தது?


K.Rajasekaran
அக் 01, 2025 05:03

உங்களது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் உங்கள் வீடு புகுந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை கொன்று விடுகிறார் , உங்களது அடுத்த அண்டை வீட்டுக்காரர் உங்களிடம் அமைதியாக இருக்க சொன்னால் இருப்பீர்களா திரு. ப. சி ? மரியானா


Modisha
அக் 01, 2025 04:44

This was the general state of affairs in both upa 1 and 2. Manmohan shamelessly walking like a doll behind Sonia in govt functions was a common sight. No one in the upa govts had any spine. China , USA and sometimes even Pakistan dictated terms to us.


Kasimani Baskaran
அக் 01, 2025 03:46

பாகிஸ்தானுக்கு ஓர் பிம்பத்தை ஏற்படுத்திய மாமனிதர். நோட்டடிக்கக்கூட தான்தான் உதவி செய்தது என்று கூட சொல்லுவார்... மானங்கெட்டவர்.


புதிய வீடியோ