உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: புதிய நடைமுறையில் டீல் செய்யும் சி.ஐ.எஸ்.எப்.,

விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: புதிய நடைமுறையில் டீல் செய்யும் சி.ஐ.எஸ்.எப்.,

புதுடில்லி; விமான வெடிகுண்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, இத்தனை ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடு முழுவதும் பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. தொடரும் இதுபோன்ற மிரட்டல்களால் பெரும் இழப்பும், பயணிகள் இடையே அச்சமும் எழுந்தது.மிரட்டல் விடுக்கும் தனிநபர்கள், சமூக விரோத கும்பல்களின் இத்தகைய செயல்கள் தற்போதும் நீடிப்பதால் அதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க விமான போக்குவரத்துத்துறைக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டு இருந்தன. இந்நிலையில், இது போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக்குழுவானது இணையதளம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதன் பின்னரே அக்குழுவில் உள்ளவர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் தீர்மானிப்பர். இதுகுறித்து சி.ஐ.எஸ்.எப்., டெபுடி ஐ.ஜி., ஸ்ரீகாந்த் கிஷோர் கூறியதாவது; சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு புரளி அழைப்புகள் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. மிரட்டல் மதிப்பீட்டுக் குழுவின் நடவடிக்கைகள் ஒரு தற்காலிக நிவாரணமே. எதிர்காலத்தில் அதன் நடைமுறைகள் மாற்றப்படும். இத்தகைய கூட்டங்களை கூட்டுவதற்கான விதிகள் திருத்தப்பட்ட உள்ளன.நேரில் ஒன்று கூடுவதற்கு பதிலாக, ஆன்லைன் மூலமாகவே வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக்குழுவினர் கூடி ஆலோசிப்பர். இதன் மூலம் நேரம் மிச்சமாவதுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவாகவும் எடுக்கப்பட வாய்ப்பு அமைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை