உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை: 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை இன்று (செப் 22) சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'முதல்வரின் காலை உணவு திட்டம்' கடந்த தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய, தமிழக வெற்றிக்கழக அரசு முடிவெடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0qq2jb2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்றியும், தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்ட விரிவாக்கத்தின் துவக்க விழா இன்று (செப் 22) நடந்தது. சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் உணவு பரிமாறினார்; அவர் மாணவ, மாணவிகளுடன் இணைந்து தரையில் அமர்ந்து உணவருந்தினார். மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

lakshmikanthan
செப் 23, 2026 19:01

அதென்ன சினிமா நடிகைகள் போல இரண்டு விரலில் சாப்ட்ற?


c.mohanraj raj
செப் 23, 2026 10:40

காலை உணவு கூட போட்டு அனுப்ப முடியாத லட்சணத்தில் தான் உள்ளது மக்கள் அவ்வளவு சிரமத்தில் உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது அப்படித்தானே


என்றும் இந்தியன்
செப் 22, 2026 17:56

காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் விஜய். கிருஷ்ணகிரியில் காலை உணவு காலி, பக்கத்து கடையில் இட்லி வாங்கி உடனே குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. பார்த்தீர்களா எவ்வளவு நல்லது செய்கின்றார் கிறித்துவ முதல்வர் ஜோசப் விஜய். இப்படி டப்பா அடிக்கவேண்டும் கிறித்துவனாக இருந்தால்???


என்றும் இந்தியன்
செப் 22, 2026 17:48

நானொரு நடிகனுங்க எனது எல்லா செயல்களும் நடிப்பு தாங்க இதை புரிஞ்சிக்காமே நீங்க இருந்தா நான் என்னா செய்ய முடியுங்க


Raghu
செப் 22, 2026 17:14

மயில்சாமி சொன்ன வசனம் நினைவுக்கு வருகிறது நடிகன்டா நீ நடிகன்டா எங்கப்பா டிபன் கேரியர காணோம்? டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு வராமல் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எங்கள் தானையத்தலைவன் தொலபதி விசய், ரீல்ஸ் பி.எம் இனி 2 வாரத்துக்கு ரீலீஸ் கன்ட்டென்ட் கெடச்சிருச்சு இந்த ஒன்ன வெச்சே உருட்டுவோம் பாரு வளர்ந்த மாநிலத்தில் இன்னும் குழந்தைகள் சாப்பாட்டுக்கு வழி இல்லை


D Natarajan
செப் 22, 2026 16:24

மனதுக்கு மிக கஷ்டமாக இருக்கு. தமிழக மக்கள் இவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்களா , காலை உணவு இல்லாத நிலையா. காலை உணவு உண்ணும் குழந்தைகள் குடும்பத்திற்கு மாதம் 5000 ரஸ் வழங்க வேண்டும்


Mario
செப் 22, 2026 16:19

"முதல் கோணல் முற்றும் கோணல்" கிருஷ்ணகிரியில் காலை உணவு காலி பக்கத்து கடையில் இட்லி வாங்கிய அவலம்


prakash
செப் 22, 2026 15:44

ஆயிரகணக்கில் சொந்த பணத்தில அன்னதானம் வழங்கும் கொடையாளிகள் யாரும் விளம்பரம் செய்வது கிடையாது அரசாங்க பணத்தில் உணவு வழங்க இவர்களுக்கு விளம்பரம் தேவையா? வேறு ஏதும் வேலை இல்ல போலும்


Muralidharan raghavan
செப் 22, 2026 15:41

காமராஜர் காலத்தில் வறுமை காரணமாக பலரும் பள்ளிக்கு செல்லவில்லை. அதனால் மதியஉணவு திட்டத்தை கொண்டுவந்தார். ஆனால் தற்போது முன்னேறிய மாநிலம் என்று கூறும் அரசியல்வாதிகள் ஏன் இப்போதும் மக்களை கையேந்த வைக்கிறாரகள்


Barakat Ali
செப் 22, 2026 15:04

கூடிய விரைவில் எம்ஜிஆர், ஜேஜே இருவரின் செல்வாக்கையும் மீறி வளர்ந்துவிடுவாரோ ??


Vasan
செப் 22, 2026 15:54

ஏற்கனவே செங்கோட்டியான் சொல்லி விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை