உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே ஊழியர் பலிக்கு காரணம் தெரியுமா? வெளியான ‛ஷாக் தகவல்

ரயில்வே ஊழியர் பலிக்கு காரணம் தெரியுமா? வெளியான ‛ஷாக் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பராவ்னி: பீஹாரில், ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி ஊழியர் பலியான விவகாரத்தில், சக ஊழியருடனான ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என தெரியவந்துள்ளது. பீஹாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பரவுனி ரயில் நிலைய சந்திப்புக்கு லக்னோ - பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்தது. ஐந்தாவது நடைமேடையில் இருந்த வண்டியில், இன்ஜினை கழற்றும் பணிக்கு அமர்குமார் ராவ் மற்றும் முகமது சுலைமான் ஆகிய 'பாயின்ட் மேன்கள்' நியமிக்கப்பட்டனர். இன்ஜினின் 'கப்ளிங்'கை பிரித்து மாற்றும் பணியில் அமர் ஈடுபட்டார். நடைமேடையில் இருந்தபடி, இது தொடர்பான தகவலை இன்ஜின் டிரைவருக்கு சுலைமான் கூறிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரயில் இன்ஜின் பின்னோக்கி நகர்ந்தது. இதில், இன்ஜின் மற்றும் பெட்டிக்கு நடுவே சிக்கி அமர்குமார் பலியானார். இன்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக, பின்னோக்கி இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, விபத்து தொடர்பாக பரவுனி ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ஊழியர்களிடையே தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 'லக்னோ - பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:10 மணிக்கு பரவுனி சந்திப்பிற்கு வந்தது. காலை 8:29 மணிக்கு இந்த விபத்து நடந்தது அங்குள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இன்ஜின் மற்றும் பெட்டிகளின் நடுவே 'கப்ளிங்'கை கழற்றிய அமர்குமாரின் நிலை குறித்து சக பணியாளரான முகமது சுலைமான், இன்ஜின் டிரைவருக்கு உரிய தகவல் தராததாலேயே இந்த விபத்து நடந்துள்ளது. 'அதேபோல், 'கப்ளிங்' கழற்றப்பட்டது தொடர்பான உறுதியான தகவலை பெறாமலேயே இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்கியுள்ளார். சுலைமான் மற்றும் டிரைவர் இடையிலான தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததால் அமர்குமார் பலியானார்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Sudhir
நவ 17, 2024 20:24

என்றுமே ஆபத்தான பணிகளில் மிகுந்த கவனம் தேவை. என்னதான் மனித தவறுகள் என்றாலும் அதையும் எதிர் பார்த்து கவனம் தேவை.


shakti
நவ 16, 2024 23:09

செத்தவன் காபிர் என்பதால் சந்தேகம்


K JAGANATHAN
நவ 13, 2024 21:29

முற்றிலும் தவறான அறிக்கை.கப்ளிங் கழற்றியபின் அமர் ட்ராக்கில் இருந்து வெளியே வந்தபின் டிரைவர் எஞ்சினை இயக்கியிருந்தால் அமருக்கு விபத்து ஏற்பட்டு இருக்காது. சாதாரண இந்த முறையை கூட பின்பற்றாத டிரைவரின் முழு தவறு.


Jose Varghese
நவ 12, 2024 20:07

என்ன சொல்ல வருகிறீர்கள்?


Raghunathan
நவ 14, 2024 10:32

சுலைமான் முஸ்லீம்... இறந்தவர் ஹிந்து.... எலேக்ஷுன் நேரம்


Raghunathan
நவ 14, 2024 10:38

சுலைமான் ஒரு முஸ்லீம் என்று சொல்ல வருகிறார் .... எலkக்ஷுன் நேரம்


Gajageswari
நவ 12, 2024 16:45

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இஞ்சின் டிரைவர் நேரடியாக பார்க்கும் வகையில் கேமரா பொருத்தலாம். சென்னை சென்ட்ரல் இரவு நேரத்தில் செல்போன் மார்ச்சில் இவர்கள் வேலை செய்கிறார்கள். தலையில் மாடும் டார்ச் வழங்கலாம்


V S Narayanan
நவ 12, 2024 07:57

I feel a sabotage.


prasad
நவ 12, 2024 06:56

வெரி குட் சுஃஜெஸ்டின். ஒன்டேரிங் ஹொவ் சபிட்டி டெபிட் ஒப்பி இந்தியன் ரைல்வேஸ் ஹவ் வர்லூகேட் இந்த திஸ் சபிட்டி அஸ்பெக்ட் சோ long...


S. Neelakanta Pillai
நவ 12, 2024 06:31

பணியாளர்களிடையே ஒருங்கிணைப்பு குறைபாடு மட்டும் காரணம் இல்லை, இதுபோன்ற ஆபத்து நிறைந்த பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற திட்டமிடல் குறைபாடும் அதையும் மீறி தவறு நடக்கும் பட்சத்தில் விபத்து இல்லாத உயிரிழப்பு இல்லாமல் தொழிலாளியை எவ்வாறு பாதுகாப்பது என்ற பாதுகாப்பு நடைமுறை குறைபாடும் முக்கிய காரணம். இதை சம்பந்தப்பட்ட ரயில்வே துறை நிர்வாகத்திற்கு இந்த செய்தியாளர் கொண்டு சென்றால் சிறப்பு.


aaruthirumalai
நவ 11, 2024 14:48

என்னடா இது பேத்தனமான ஆய்வு முடிவு. உயிர்?


Rasheel
நவ 11, 2024 12:09

வந்தே பாரத் ரயில்களில் கல் எறிவது, இரும்பு , மர தடுப்புகளை வைத்து விபத்து ஏற்படுத்துவது போன்றவை மர்ம நபர்களால் நாடு முழவதும் அமைதி முறைப்படி நடிக்கிறது. இதற்கு ஒரு எதிர் கட்சி கோமாளி வேற கூச்சல் போடுகிறான். பதவிக்காக நாட்டை காட்டி கொடுப்பதில் கை தேர்ந்தவர்கள்.


புதிய வீடியோ