மேலும் செய்திகள்
எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல்
11-Dec-2024
பெலகாவி: முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாராயணா, ஜெயண்ணா மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாள், கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாராயணா, ஜெயண்ணா மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து, சபாநாயகர் காதர் பேசியதாவது:பெலகாவி தொகுதியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்ற, முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணா உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். சாம்ராஜ்நகர் கொள்ளேகால் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநில சேமிப்பு கிடங்கு கழக தலைவருமான ஜெயண்ணா, கடந்த 10 ம் தேதி மரணம் அடைந்தார். இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.,வாக சிறப்பாக பணியாற்றினர். மக்களுக்காக சபையில் குரல் கொடுத்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் அசோக், விவசாய அமைச்சர் செலுவராயசாமி, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா உள்ளிட்டோர் பேசினர். பின், மறைந்த இருவருக்கும் சபையில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
11-Dec-2024