உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார்: காங்கிரசுக்கு பிரதமர் கேள்வி

மும்பை தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார்: காங்கிரசுக்கு பிரதமர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: கடந்த 2008 ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.கடந்த 2008 ம் ஆண்டு நவ., 26 ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பதவியேற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5y2431zc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறித்து பேட்டி கொடுத்து இருந்தார். சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், நவி மும்பை விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை ஒரு நாடு தடுத்ததாக காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.காங்கிரசின் பலவீனம் பயங்கரவாதிகளுக்கு பலமாக மாறியது. இந்த தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. எங்களை பொறுத்தவரை தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. வளர்ந்த பாரதம் என்பதன் கொள்கை, வளர்ச்சி மற்றும் வேகம் என்பது ஆகும்.சில தலைவர்கள் வளர்ச்சியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதுடன் அவர்கள் ஊழலிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
அக் 09, 2025 10:36

ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்கள் பாக்கிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்ததால் இந்தியாவை துச்சமாக நினைத்து இருந்தார்கள். அதனால் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் இப்போது உள்ள ஆட்சியினால் பாக் தீவிரவாதிகள் ஒடுக்க படுகின்றனர். இனி ஒரு முறை தாக்குதல் நடந்தால். முமு பாக்கிஸ்தான்


சிந்தனை
அக் 08, 2025 19:47

அருமை வாழ்க வீரன் மோடி


saravanan
அக் 08, 2025 19:32

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் அளித்த சமீபத்திய போட்டியில் அமெரிக்க கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது பதில் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் இந்திய நாட்டின் நிலப்பரப்பை அண்டையில் உள்ள எதிரி நாடுகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்திருப்பர் என்பதை இவரின் பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்த பழைய நினைப்பில் தான் சீனாவும் பாகிஸ்தானும் இந்திய மண்ணை கபளீகரம் செய்ய முயற்சித்து முடிவில் மண்ணை கவ்வுகின்றன காரணம் மத்தியில் நடப்பது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இதுமட்டுமல்ல தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பும் தான்தான் மத்தியஸ்தம் செய்து இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக உளறிக் கொண்டிருப்பதும் இன்னும் பழைய நினைவிலிருந்து அவர் விடுபடாமல் இருப்பதையும் மற்றும் பிற நாடுகளின் பார்வையில் நம் நாடு எப்படி இருந்திருக்கிறது என்பதையுமே காட்டுகிறது பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் நாடு மாட்சிமை அடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்


Kumaran
அக் 08, 2025 19:27

மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியை யார் தடுத்தது? என்பதுதான் மக்களின் கேள்வி! அதையே பிரதமர் கேட்கிறார்., ஆனால் ஒரு மேதாவி கனடாவிலிருந்து சரியான புரிதல் இல்லாமல் விமர்சனம் எழுதுகிறார்.


RAMESH KUMAR R V
அக் 08, 2025 18:54

யார் அந்த சார்


திகழ்ஓவியன்
அக் 08, 2025 18:51

அதே தான் palacode 42 ராணுவ வீரர்கள் இறந்தனர் ,காஸ்மீரில் அப்பாவி TOURIST 29 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இதை எல்லாம் ஏன் தடுக்கவில்லை உங்களை தடுத்தது யார்


vivek
அக் 09, 2025 01:44

ஜால்ரா புகழ் திகழ்


பேசும் தமிழன்
அக் 09, 2025 08:47

... பதில் தாக்குதல் இந்தியா கொடுத்தா இல்லையா.... ஆனால் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த பின்பு பதில் தாக்குதல் நடத்த விடாமல் கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்தது ஏன்.... உங்களை யார் தடுத்தது.... நீங்கள் யாருக்கு அடிமையாக இருந்தீர்கள்.... அந்த பெரியண்ணன் யார் ?... அதை சொல்லாமல்.... இதென்ன வழா... வழா... கொழ கொழா பதில்.


Amsi Ramesh
அக் 08, 2025 18:21

தொடை நடுங்கி காங்கிரஸ்


புதிய வீடியோ