உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., முதல்வர்கள் அதானிக்கு ஆதரவு!

காங்., முதல்வர்கள் அதானிக்கு ஆதரவு!

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லி வந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சிவகுமார் சந்தித்தார். கட்சி தொடர்பான பல விஷயங்கள் பேசப்பட்டன. தொழிலதிபர் அதானி குறித்தும் சில விளக்கங்களை சிவகுமாரிடம் கேட்டார் ராகுல்.'அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள். அதானிக்காக எதையும் செய்வார் மோடி' என, பிரசாரம் செய்து வருகிறார் ராகுல். 'வெளியே தான் இந்த எதிர்ப்பு. ஆனால், காங்., ஆளும் மாநிலங்களில் அதானிக்கு தான் முதலிடம்' என, பா.ஜ., கிண்டலடிக்க, கர்நாடக முதல்வர் சிவகுமார்- - அதானி சந்திப்பு, ராகுலுக்கு தலைவலியை உண்டாக்கி விட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rsmj3v0d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 23ல், தொழிலதிபர் அதானி, பெங்களூரில் முதல்வர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 'இது என் தனிப்பட்ட சந்திப்பு அல்ல. முதல்வர் என்ற முறையில், கர்நாடகாவில் அதானி முதலீடு செய்ய உள்ளார். அது தொடர்பாக தான் சந்தித்தேன்' என, ராகுலிடம் விளக்கம் அளித்தார் சிவகுமார்.பெங்களூரின் சில்க் போர்டிலிருந்து, ஹெப்பால் வரை தரைக்கு அடியில், 22,276 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை தயாரித்துள்ளார் சிவகுமார். இந்த பாதை, பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் என்பது அவரின் கருத்து. இத்திட்டத்திற்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.மற்ற கம்பெனிகளை விட, குறைந்த தொகையில் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக டெண்டரில் குறிப்பிட்டுள்ளது, அதானி குழுமம். இதனால் இவர்களுக்குத் தான் டெண்டர் கிடைக்கும். ஆனால், 'இத்திட்டத்தால் டிராபிக் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு தான் கிடைக்கும்; 2031ல் மீண்டும் நெரிசல் ஏற்படும்' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சிவகுமாரோ இத்திட்டத்தை செயல்படுத்தினால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என, நம்புகிறார்.காங்., ஆட்சி செய்யும் தெலுங்கானாவிலும், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது அதானி குழுமம். ராகுலுக்கோ அதானி எதிரி; ஆனால், அவர் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களுக்கு அதானி தான், 'ஹீரோ!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பப்பு யாதவி, 10, ஜன்பத், டெல்லி
ஆக 30, 2026 19:11

fraudulent டின் மொத்த உருவம் இந்த தேசத் துரோகி


பேசும் தமிழன்
ஆக 30, 2026 14:29

எல்லாம் ராகுலின் இரட்டை வேடம்.... வெளியே பேசுவது ஒன்று.... உள்ளே நடப்பது வேறு.... அது வேற வாய்... இது வேற வாய்.


duruvasar
ஆக 30, 2026 13:21

இப்படித்தான் இரட்டை வேடம் போட்டு நடிப்பார். என்ன அது போக இது அவிங்க குடும்ப பாரம்பரியமும் கூட


GMM
ஆக 30, 2026 09:51

ஒரு புத்தகத்தில் விமான நிலையம், பஸ் நிலையம், தபால் நிலையம் , துறைமுகம்.. போன்றவை வரைந்து துறைமுகத்தை காட்டு ராகுல் என்றால், காட்ட தெரியாது. வாக்காளர்கள் ராகுலை தான் விரும்புவர். தேர்தல் முறையும் ராகுலுக்கு தான் வழி காட்டும்.


Venkatesan Srinivasan
ஆக 30, 2026 13:29

டிகே சிவகுமாருக்கு ஒரு கர்நாடகம் முதலமைச்சர் ஆக இருக்கிறது. இந்தியா முழுவதற்கும் தாங்களே முதல் அமைச்சர் என்ற எண்ணத்தில் உள்ளனர்.


Gokul Krishnan
ஆக 30, 2026 09:51

உண்மையான பிரதமர் என்பதை காங்கிரஸ் முதல்வர்கள் இப்போது தான் அறிந்தனர்


Thiru, Coimbatore
ஆக 30, 2026 09:44

இங்கே தீமூகா... அங்கே ராகுல்... இருவருக்கும் எப்படியோ ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நம் நாடு தற்போது எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் அது பொறுக்காது எதையாவது பொய்களை அள்ளி விட்டு மக்களை குழப்புவார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஆக 30, 2026 09:41

பொதுவாகவே திட்டங்களில் ஆட்டயப்போட மக்களின் வரிப்பணம், தேர்தல்களில் வெல்ல , கட்சி நிதியை வலுப்படுத்த தொழிலதிபர்களிடமிருந்து நிதி .... இதை செய்யாத அரசியல் கட்சியே கிடையாது .....


Ambika. K
ஆக 30, 2026 09:27

வாங்கிய 200 ரூபாய்க்கு அதிகமாகவே கூவறான்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 30, 2026 09:25

அதானியை புலிகேசி மன்னரின் மாப்பிள்ளை சந்திச்ச விவரத்தை வெளியிடுவேன்னு அண்ணாமலை சொல்லிக்கிட்டு இருந்தாரே ? ஆக காங்கிரஸ், பாஜக, திமுக எல்லோருமே அதானி தூக்கிப்போடுறதைக் கவ்விக்கிட்டு ஓடுறவங்கதான் ....


சூர்யா
ஆக 30, 2026 08:47

கட்சித் தலைமையை சமாதானப் படுத்தியாவது மாநில வளர்ச்சித் திட்டத்தை கொண்டு வருகிறார் கர்நாடகா முதல்வா்.ஆனால் இங்கு இருந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து விட்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை