உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக பார்த்த காங்.,: அமித்ஷா சாடல்

ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக பார்த்த காங்.,: அமித்ஷா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நகோன்: '' அசாம் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரர்களை காங்கிரஸ், தங்களின் ஓட்டு வங்கியாக பார்த்தது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.அசாம் மாநிலம் நகோன் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் அனைவரையும் வெளியேற்றுவது என பாஜ உறுதிபூண்டுள்ளது. இங்கு வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் இருப்பது சரியானதா? ஊடுருவல்காரர்களை அப்புறப்படுத்திய அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மாவை பாராட்டுகிறேன். ஊடுருவல்காரர்களிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தை அசாம் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும், அசாம் மாநிலத்துக்காக போராடியவர்களுக்காக எதையும் செய்யவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=plg07rqn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அசாம் மக்கள், நிலம் மற்றும் கலாசாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்த ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் ஓட்டு வங்கியாக பார்த்தது. அசாம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை பாஜ அரசு கண்டறியும். பிரதமர் மோடி, அசாம் மக்களின் கலாசார அடையாளத்தை மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சியிலும் கவனத்தில் கொண்டு உள்ளார். அசாமை ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற இன்னொரு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SRIRAMA ANU
டிச 29, 2025 21:37

நீங்கள் எங்களை மூடர்களாக நினைக்கும் பொழுது... நீங்களும் ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.. வங்கதேசங்கள் நுழைந்தால் அவர்கள் அன்னியர்கள்.. வங்கதேச பிரச்சனையில் அங்கு ஒரு கொலை நடந்தால் உடனே இந்து என்று கூறிக் கொள்கிறீர்கள்.. உங்களுடைய பித்தலாட்டத்திற்கு ஒரு அளவே இல்லையா


Rathna
டிச 29, 2025 20:36

4100 km தூரம் உள்ள இந்திய வங்காள தேச எல்லையை பாதுகாப்பது கடினம். இந்தியா பாக்கிஸ்தான் பார்டெரை பாதுகாப்பது போல இந்திய அரசு அதை பாதுகாப்பது இல்லை. ஊடுருவல்காரர்கள் உள்ளே புகா வண்ணம் மின்வேலி அமைக்கப்பட வேண்டும். அது பல இடங்களில் இல்லை. அப்படி செய்தாலும், அங்கு உள்ள சவுக்கு காடுகள், ஏரிகள், ஆறுகள், வயல்வெளிகள் மூலம் இந்த காட்டான் கூட்டங்கள் உள்ளே வர வழி உள்ளது. இதற்கு காரணம் மேற்கு வங்க மாநிலம் அதற்கு உதவ தயாராக இல்லை. ஏன் என்றால் அந்த கட்சியின் மர்ம எஜமானர்கள் பங்களாதேஷில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு அதறகான கடுமையான நடவடிக்கைகளை உச்ச கோர்ட் மூலம் எடுக்கவில்லை. இது தவிர சேட்டன் நாடு, டெல்லி பழைய அரசு, ஜார்கன்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்கள் ரோஹினியாக்களை, பங்களாதேஷிகளை குடியமர்த்த மறைமுக உதவி செய்கின்றன. இது தான் இந்த நாட்டின் மீது அரசியல்வதில் செய்யும் அநீதி.


V RAMASWAMY
டிச 29, 2025 16:54

ஊடுருவல்காரர்கள் என்று தெரிந்தும் அவர்களை ஆதரிப்பது மடத்தனம், தேச விரோத செயல்.


Narayanan Muthu
டிச 29, 2025 19:12

ஊடுருவல்காரர்கள் எப்படி வந்தார்கள். யார் தவறு


முக்கிய வீடியோ