உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைக்க தொடர்ந்து காங்., முயற்சி: பிரதமர் மோடி

ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைக்க தொடர்ந்து காங்., முயற்சி: பிரதமர் மோடி

புதுடில்லி: '' ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைக்க கிடைக்க எந்த ஒரு முயற்சியையும் காங்., தவற விடவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து இருந்தார். இதன் மீது காங்கிரசின் பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் பேசியிருந்தனர்.

நமது லட்சியம்

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் ஜனநாயகத்தின் தாய் என அழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமையை நீண்ட நாட்களுக்கு பிறகே வழங்கின. நமது அரசியலமைப்பு பெண்களுக்கு ஆரம்பம் முதலே ஓட்டுரிமை வழங்கியது. இன்று ஒவ்வொரு திட்டத்தின் மையமாக பெண்கள் உள்ளனர். இச்சமயத்தில் ஜனாதிபதி பதவியில் பெண் உள்ளார்.நாடு மிக வேமாக நமக்கு ஆதரவு அளித்து வருகிறது. விரைவில் உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போகிறது. நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவது என்பது நமது லட்சியம். இதனை அடைய அரசியலமைப்பை பயன்படுத்தி உழைக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை அரசியலமைப்பு வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட நிர்ணய சபையில் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் உறுப்பினர்களாக இருந்தனர்.பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாக உள்ளது. விடுதலைக்கு பிறகு சில இந்தியர்கள் அடிமை மன நிலையிலேயே சிக்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசின் முடிவுகள் அனைத்தும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் உள்ளன.

காங்.,கின் கறை

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவசர நிலைகொண்டு வரப்பட்டு, அரசியலமைப்புக்கு முடிவுரை எழுதப்பட்டது. மீடியா சுதந்திரம் நசுக்கப்பட்டது. நாடு முழுதும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த காங்கிரசின் நெற்றியில் உள்ள கறை அழியாது. ஜனநாயகத்தை நெரித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேட்டார். அரசியலமைப்பு இல்லை என்றால், எங்களை போன்றவர்கள் இங்கு வந்திருக்க முடியாது. 3 முறை மக்கள் எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளனர்.55 ஆண்டுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தனர். காங்., கின் ஒரே குடும்பம் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைப்பதற்கு கிடைத்த எந்தவொரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. அக்குடும்பம் அரசியலமைப்பை அதிகம் காயப்படுத்தியது. நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள

காங்.,கின் குணம்

1947 - 52 வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இங்கு இல்லை. 1952 முன்பு ராஜ்யசபாவும் உருவாக்கப்படவில்லை. ஆனால், அரசியலமைப்பை மாற்றுவதற்கு அவசர சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அச்சட்டத்தை நேரு கொண்டு வந்தார். அரசியலமைப்பை மாற்றுவது அக்கட்சியின் குணமாக மாறியது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் காயப்படுத்தினார்கள். நமது பாதையில அரசியலமைப்பு குறுக்கிட்டால் அதனை மாற்ற வேண்டும் என நேரு கூறினார்.

விஷவிதை

75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை காங்., மாற்றியது. அரசியல்சாசனத்தை காங்கிரஸ் போல் அழித்தது வேறு யாரும் அல்ல. நேரு விதைத்த விஷச்செடியை இந்திரா வளர்த்தார். 1976 ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை மாற்றியவர் இந்திரா. தன்னுடைய பிரதமர் பதவியை காப்பாற்றவே இந்திரா அவசர நிலை கொண்டு வந்தார். அவசர நிலைக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய நீதிபதியை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க மறுத்தார். இதுதான் அவர்கள் அரசியலமைப்பிற்கு காட்டிய மரியாதை.அரசியல்சாசனத்தை காரணம் காட்டி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர். காங்., கூட்டாளிகள் சிலர் அவசர நிலை காலத்தில் சிறை சென்றவர்கள். இன்று காலத்தின் கட்டாயத்தால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

மன்மோகன் புத்தகம்

கட்சி தலைமை அரசின் மையமாக செயல்படுகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். கட்சியின் தலைவர் என்னை விட அதிக அதிகாரம் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமரின் அதிகாரத்தை மீறும் வகையில் தேசிய ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்டதாக தேசிய ஆலோசகர் பதவி இருந்தது. அமைச்சரவை நிர்ணயித்த ஒரு அவசர சட்டத்தை பத்திரிகையாளர் முன்னிலையில், ஒருவர் கிழித்து எறிந்தார்.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பார்லிமென்டிலும் காங்கிரஸ் கட்சியினர் பேசி உள்ளனர். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வர காங்., முயற்சி செய்கிறது. தனது ஓட்டு வங்கிக்காக இதனை செய்கிறார்கள். அக்கட்சி ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஒரே சிவில் சட்டம் வரும் என அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் சொன்னார்கள். பொதுசிவில் சட்டம் நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காதது காங்கிரசின் குணத்தில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sampath Kumar
டிச 15, 2024 08:43

ஏற்கனவே நீங்க சீரழித்துகொண்டு இருப்பதுபத்தாதா இவரு வேற செய்கிறாரா அட போங்க அப்பு ஒரே பக்கித்தனமாக இருக்கு உங்க அரசியல் சீக்கிரம் வீட்டுக்கு போங்க இந்திய பிழைக்கட்டும்


K.SANTHANAM
டிச 15, 2024 06:42

பிரதமரின் உரை அருமையாக இருந்தது. இந்தி மொழி தெரியவில்லை என்றாலும் அவரது பேச்சின் பொருள் நன்றாக புரிகிறது. காங்கிரஸ் கட்சியை தாக்கிய விதம் அருமை.


கிஜன்
டிச 14, 2024 22:37

ஏன்ங்க .... அவங்க எல்லாரும் ஜமீன் ஜபர்தஸ்ல ....வந்தவங்க ....அத மாற்றத்தானே நாங்க ஒரு ஏழைத்தாயின் மகனை தேர்ந்தெடுத்திருக்கிறோம் ...... கடந்த 10 ஆண்டுகளில் ...நிதி அமைச்சகத்தை தவிர .... பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளீர்கள் .... உங்க கட்சி காரர்களே அதையெல்லாம் மறக்கிறார்கள் .... பொதுக்கூட்டம் நடத்த சொல்லுங்க ...


manohar manoj
டிச 14, 2024 22:15

PM speech is very good and clear


Barakat Ali
டிச 14, 2024 21:47

அவ்வளவுதான் வீரம் ..... பரிதாபமாக அழும் நிலைக்கு வந்துவிட்டார் ..... என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சவும் வாய்ப்பு .....


Sivagiri
டிச 14, 2024 21:08

ஐயோ பாவம் , இவரும் எதனை தடவைதான் கழுவி கழுவி ஊத்தினாலும் , கொஞ்சமும் சூடு சொரணை இருக்கா , இதுவும் ஒரு டைப் மாடல்தான் போல . . .


Sivagiri
டிச 14, 2024 21:04

எல்லா கட்சியும் அதன் உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும் என்று சொன்னார்கள் , ஆஜர் ஆனார்களா , காது கொடுத்து கேட்டார்களா , இல்ல , உண்ட மயக்கத்தில் தூங்கிட்டாங்களா ?


அப்பாவி
டிச 14, 2024 20:27

இந்திய ஜனநாயகம் 1947 ல் தான் உருவாச்சு. அதுக்கு முன்னாடி 1600 களில் இங்கிலாந்து மன்னராட்சியை ஒழிச்சு பார்லிமெண்ட் வந்தாச்சு.1776 ல அமெரிக்காவில் டெமாக்ரசி வந்தாச்சு. வரலாறு தெரியாம இங்கே ராமர் காலத்திலேயே தேர்தல் நடந்தது, சோழர்காலத்தில் குடவோலை நாமதான் ஜனநாயகத்தின் தாய்னு உருட்டறாங்க.


முருகன்
டிச 14, 2024 20:25

கடந்த 11 வருடமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை


அப்பாவி
டிச 14, 2024 20:10

ரெண்டு பார்ட்டியும் அண்டப் புளுகர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை