உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

புதுடில்லி: அண்மையில் நடந்த 4 மாநில இடைத்தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையில், முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.கடந்த ஜூன் 19ம் தேதி கேரளாவின் நிலம்பூர் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிக்கும், பஞ்சாப்பின் லூதியானா மேற்கு தொகுதிக்கும், குஜராத்தின் விசவதார் மற்றும் காதி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கம் மற்றும் கேரளாவுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைத்தேர்தலை அனைத்து கட்சிகளும் முன்னோட்டமாக பார்க்கின்றன.

நிலம்பூர்

நிலம்பூர் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத் முன்னிலை வகிக்கிறார். நிலம்பூர் தொகுதி காங்., எம்.பி., பிரியங்காவின் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் வருவதால், இந்த தேர்தல் முடிவு காங்கிரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 14 சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 10,035 ஓட்டுகள் (மொத்த வாக்கு 58,098) முன்னிலையில் உள்ளார்.

லூதியானா மேற்கு

பஞ்சாப்பின் லூதியானா மேற்கு தொகுதியை கைப்பற்ற பா.ஜ., ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டில்லி தேர்தலுக்குப் பிறகு நடக்கும் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தொகுதியை மீண்டும் கைவசப்படுத்த ஆம்ஆத்மி போராடுகிறது. அதன்படி, ஆம்ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா முன்னிலை வகிக்கிறார். பா.ஜ., சார்பில் ஜீவன் குப்தா போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையில் 6 சுற்றுகள் முடிவில் ஆம் ஆத்மி 2,286 ஓட்டுகள் முன்னிலை வகிக்கிறது.

குஜராத்

விசாவதர் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பூபேந்திர பயானி, கடந்த 2023ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்து விட்டார். எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பா.ஜ., வென்றதே இல்லை. எனவே, இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கிர்த்தி படேலை பா.ஜ., களமிறக்கியது. ஆம்ஆத்மி சார்பில் கோபால் இதாலியாவை நிறுத்தியது. ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 11 சுற்றுகளின் முடிவில் பா.ஜ., வேட்பாளர் கிர்த்தி படேல் 33,710 ஓட்டுகள் பெற்றுள்ளார். ஆம்ஆத்மி வேட்பாளர் கோபால் இதாலியா 38,710 ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதன்மூலம், அவர் 5658 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். எனவே, எப்போது வேண்டுமானாலும் முடிவுகள் மாறும் வாய்ப்புள்ளது. அதேபோல, காதி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கர்சன் சோலாங்கி மறைவை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தனி தொகுதியான காதியில் பா.ஜ., சார்பில் ராஜேந்திர சவாடா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் ரமேஷ் சவாடாவும், ஆம் ஆத்மி சார்பில் ஜெக்தீஷ் சவாடாவும் களமிறங்கினர். ஓட்டு எண்ணிக்கையில் 11 சுற்றுகளின் முடிவில் பா.ஜ.,வின் ராஜேந்திரகுமார் சவாடா 21 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கலிகஞ்ச்

திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-, நசாருதின் அகமது மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் ஆஷிஷ் கோஷ் களமிறங்கினார். 4 சுற்றுகளின் முடிவில், ஆலிபா அகமது 32,308 ஓட்டுகள் பெற்றுள்ளார். இது பா.ஜ., வேட்பாளரை விட 19,164 ஓட்டுகள் முன்னிலையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V.Mohan
ஜூன் 23, 2025 14:29

மேற்கு வங்காள மக்கள் அறிவாளிகள் என்ற பொதுக்கருத்து தப்பு போல. இந்திய விடுதலைக்கு மிக முக்கிய பங்களிப்பு தந்த மேற்கு வங்கத்தவர்களை பயனற்றவர்களாக ஆக்கியுள்ள திருணமூல் காங்கிரஸின் பயங்கர சர்வாதிகாரியான மம்முதா பேகம் பானர்ஜி. இந்த மம்முதா பேகம் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவராக விரைவில் அறியப்படுவார்.. பங்களாதேசிகளை உள்ளே விட்டு வாக்குரிமை பெற்றுத் தந்த மம்தா பானர்ஜி,பங்களாதேச ராணுவத் தளபதியின் ""கொல்கத்தாவை கைப்பற்றுவோம்"" என்ற மிரட்டலுக்கு பதில் தர """ எந்த ஆணியை யாரை வைத்து பிடுங்குவார்???


rajan_subramanian manian
ஜூன் 23, 2025 13:13

கேரளாவில் உள்ள வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீலாம்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் அடுத்த பிரதம மந்திரியாக பப்புவிக்கு வாய்ப்பு உள்ளதால் சட்ட சபையில் திமுக கூட்டணியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் எழுபது தொகுதிகள் ஒதுக்கி ஒரு தொகுதிக்கு ஒரு இரண்டு கோடி வீதம் தானை தலைவர் பெருந்தகய்யிடம் கொடுத்தால் இன்னும் சத்தமாக ஜால்ரா போடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.


Iyer
ஜூன் 23, 2025 13:11

 அங்கே 50, இங்கே 100 என்று பங்களாதேகிகளை பிடித்து மார்தட்டிக்கொள்வதில் ஒரு பிரயோஜனம் இல்லை .  நாடு முழுவதும் சுமார் 5 கோடி சட்டவிரோத பங்களா + ரோஹிண்யாக்கள் உள்ளனர் . நடவடிக்கை தீவிரமாக எடுக்காவிட்டால் ஜெர்மனி , பிரான்ஸ் போல் நாமும் அழிவுப்படையை நோக்கி செல்ல நேரிடும்


venugopal s
ஜூன் 23, 2025 12:54

குஜராத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதியின் பெயர் காதி அல்ல, அதை கடி என்று உச்சரிக்க வேண்டும்!


Narayanan
ஜூன் 23, 2025 12:21

உண்மைதான் . மம்தாவின் கட்சி வெற்றி பெற இதுதான் காரணம் . பங்களாதேசிகளை வெளியேற்றிவிட்டால் மம்தாவின் கட்சி தோற்றுவிடும் .


Iyer
ஜூன் 23, 2025 11:57

மேற்கு வங்கத்தில் TMC ஐ தோற்கடிக்க இப்போதைக்கு எந்த கட்சியாலும் முடியாது. சுமார் 1 கோடி பங்களாதேஷிகளும், ரொஹிங்கியாக்களும் TMC ன் உதவியால் கள்ளத்தனமாக ஆதார் கார்டு ம் - வோட்டர் ID ம் பெற்று TMC க்கு சாதகமாக ஓட்டளித்து வருகின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை