உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்

ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ, பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதன் மூலம் அக்கட்சி அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.பீஹார் காங்கிரஸ் நேற்று ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1dm1934l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெட்கப்படணும்

வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜவின் செஷாத் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் விவாதங்கள் தரம் குறைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. பிரதமரின் தாயாரை அவமதித்ததற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக, காங்கிரஸ் அதனை நியாயப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவரை பொய் கூறி பாதுகாத்து வருகிறது.இப்போது பீஹார் காங்கிரஸ், ஒரு அருவருப்பான வீடியோ உடன் அனைத்து வரம்புகளையும் மீறவிட்டது. அக்கட்சியின் துஷ்பிரயோகத்தையே இது காட்டுகிறது. பெண்களை அவமானப்படுத்துவது என்பது அக்கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது. நம்முடன் இல்லாதவர் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்.காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. முதலில் காங்கிரஸ் மேடையில் இருந்து பிரதமரின் தாயாரை அவமதித்தனர். தற்போது வீடியோ மூலம் மீண்டும் அவமதிக்கின்றனர். இதனால், பீஹார் மக்கள் கோபத்தில் உள்ளதால், தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அந்தப் பதிவில் பூனவாலா கூறியுள்ளார்.

மன்னிப்பு வேண்டும்

பாஜவின் அர்விந்த் குமார் சிங் கூறுகையில், பிரதமரின் தாயார் குறித்து ஏஐ மூலம் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது. கோடிக்கணக்கான தாயார்களின் உணர்வுகளை அக்கட்சி புண்படுத்தி உள்ளது. நமது நாட்டில் தாய்மார்களை கடவுள் துர்கை, லட்சுமி, சரஸ்வதியாக போற்றி வருகிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

காங் விளக்கம்

அதேநேரத்தில் காங்கிரசின் பவன் கேரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமரின் தாயாரை எந்த இடத்தில் அவமதிக்கும் வகையில் காட்சி உள்ளது. ஏதாவது ஒரு வார்த்தை, ஒரு குறியீட்டை காட்ட முடியுமா? தங்களது குழந்தைக்கு பாடம் சொல்லித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. அவர், தனது குழந்தைக்கு பாடம் தான் எடுக்கிறார். ஒரு குழந்தை, இதனை அவமரியாதை எடுத்தால், அது தலைவலி. எங்களுக்கு அல்ல உங்களுக்கு.பாஜ ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் ஆக்கி போலியாக கருணையை உருவாக்க வேண்டியது ஏன். பிரதமர் அரசியலில் உள்ளார். அனைத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் நகைச்சுவையையும் ஏற்க வேண்டும். தற்போது நகைச்சுவை இல்லை. இது எங்களின் அறிவுரை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

கண்ணன்
செப் 13, 2025 08:58

முதலில் காங் தனது கட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய இறையாண்மை குறித்துப் பாடம் எடுக்கட்டும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 07:52

பதிலுக்கு அழுவாச்சி வீடியோ, டிவி பிரோக்ராம் எப்போ?


Thravisham
செப் 13, 2025 02:17

பெண் பித்தனால் இந்த நாடு அடைந்த கோளாறுகள் நஷ்டங்கள் ஏராளம், ஏராளம். காந்தியை துர்போதனைக்கு உள்ளாக்கி பிதாமகன் படேலை துரத்தியது, கேடுகெட்ட கம்மிகள் உதவியுடன் சுபாஷ் சந்திரா போஸை சைபிரியாவில் போட்டுத் தள்ளியது, தன் எய்ட்ஸ் நோயை மறைத்தது, வாரிசு அரசியல் செய்தது, ராணுவ வீரர்களை அடக்கி காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க அனுமதித்தது, வட கிழக்கு பகுதிகளை சீனாவிற்கு தாரை வார்த்தது, அத்துப்போன சோசியலிசத்தை இந்தியாவில் புகுத்தியது


M Ramachandran
செப் 13, 2025 01:27

இங்கு பிறந்த வனுக்கு கூட இது உறுத்த வில்லையா? அவங்க லோட சேர்ந்த தால் மறத்து போச்சோ என்னவோ? பண்ணியுடன் சேர்ந்து கன்று சுத்துவதால் கன்றும் மனித கழிவை உட் கொள்ளும் என்று சொல்வார்கள். இந்த கும்பலவந்தால் இந்தியாவையே நம் கலாச்சாரத்தியய கெடுத்து விடுவார்கள்.இங்கு விடியல் கம்பெனிகள் செய்யும் அளப்பறைககள் போல


M Ramachandran
செப் 13, 2025 01:19

இவங்க நல்ல பிறவியேயே கிடையாது. சோனியாவை அந்த இடத்தில் வையத்து பார்க்கட்டும். அவர்களுக்கும் நம் கலாச்சாரத்திற்கும் சம்பந்த மில்லை. இன்னோருத்தனுடன் சகஜ மாக கை கோர்த்து செல்வார்கள். அந்த நினைய்ப்பு வந்திருக்கும்.


M Ramachandran
செப் 13, 2025 01:15

இந்த அயல் கையேந்தி பிச்சையெடுக்கும் நாட்டு துரோகிகளுக்கு நல்ல சாவு நிச்சயம் கிடையாது.


Priyan Vadanad
செப் 12, 2025 23:54

காங்கிரசுக்கு மரமண்டையா அல்லது சொறிமண்டையா என்பது புரியவில்லை. ஏன் பிரதமரின் தாயாரின் படத்தை இவர்கள் உருவாக்கவேண்டும்? பாவக்கவை உசுப்பிவிட்டு நமது பிரதமர் மக்களிடம் பரிதாபமாக பேசும்படி செய்துவிடுகிறார்கள். காங்கிரஸ் பிஹார் தேர்தலில் மண்ணை கவ்வும் என்று நான் நினைக்கவில்லை. கண்டிப்பாக களிமண்ணை கவ்வி விழுங்கி மூச்சு திணறி ..... நடக்கும்.


vivek
செப் 13, 2025 08:59

என்ன செய்ய அவங்களுக்கு இல்லையே


Thirumal s S
செப் 12, 2025 22:58

இறந்து போனவர்களின் மனசாட்சி கனவில் வரவேண்டும் என்றால் அதற்கு தூங்குவரின் மனது நல்ல மனதாக இருக்க வேண்டும்.


சிட்டுக்குருவி
செப் 12, 2025 22:09

விநாச காலே விபரீத புத்தி


ஆரூர் ரங்
செப் 12, 2025 21:39

இதே மாதிரி லண்டன் பார் டான்சர் வீடியோ தயாரித்து வெளியிட முடியும். ஆனால் பிஜெபி அவ்வளவு தரக்குறைவாக நடக்காது.