உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., திம்மப்பாவுக்கு 2 டாக்டர் பட்டங்கள்

காங்., திம்மப்பாவுக்கு 2 டாக்டர் பட்டங்கள்

பெங்களூரு: ஷிவமொக்காவின், குவெம்பு பல்கலைக்கழகம், கவுதி சிவப்பா நாயக விவசாயம் மற்றும் தோட்டக்கலை பல்கலைக் கழகங்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் காகோடு திம்மப்பாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளன. சமுதாயம் மற்றும் அரசியலில் இவர் செய்த சாதனைக்காக, இந்த டாக்டர் பட்டங்கள் அவருக்கு வழங்கப்படுகின்றன.இரண்டு பல்கலைக் கழகங்களும், கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரம் ஒதுக்கி தர காத்திருந்தன. இதன்படி வரும் 22ம் தேதி, கவர்னர் ஷிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஜனவரி 22ல் காலை 10:30 மணிக்கு, குவெம்பு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்கவுள்ளது.அதே நாள் மதியம் 2:00 மணிக்கு, கெளதி சிவப்பா நாயக பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இரண்டு பல்கலைக் கழகங்களிலும், திம்மப்பா டாக்டர் பட்டம் பெறுகிறார். இது குறித்து, அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை