உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு

ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு

பரிதாபாத்: ஹரியானாவில் நேற்று 360 கிலோ வெடி மருந்து மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதே பகுதியில் 2,563 கிலோ வெடிமருந்தை ஜம்மு காஷ்மீர் போலீசார் பறிமுதல் செய்தனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் டாக்டர்கள் இருவர் உட்பட 7 பேர் கைதான நிலையில், பயங்கர சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=auo17l7t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் அகமது ராதர் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளான்.அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் வெளியாகின.அந்த தகவலின் பேரில், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வந்துள்ளான். இதையடுத்து, முஜாமில் ஷகீலை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

மற்றொரு வீட்டில்

இன்று அந்த பகுதியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், மற்றொரு வீட்டில் 2,563 கிலோ வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது அமோனியம் நைட்ரேட் ஆக இருக்கும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், பயங்கரவாத தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. கைதான நபர்களின் பின்னணி, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விளக்கம்

சோதனை குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிட்ட அறிக்கை; ஸ்ரீநகர், அனந்த்நாக், கந்தர்பால் மற்றும் ஷோபியான் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. உத்தபிரதேசத்தின் ஷஹாரன்பூரிலும், ஹரியானாவின் பரிதாபாத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஜ்வாத்-உல்-ஹிந்த் என்ற உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று, மாணவர்கள் உள்ளிட்டோரை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சோதனையின் போது, அரிப் நிசார் தார், யசிர் உல் அஷ்ரப், மக்சூத் அகமது தார், மோல்வி இர்பான் அகமது, ஜமீர் அகமது அஹாங்கர், முஷாமில் அகமது கனாய், அடில் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள், எலக்டிரானிக் கருவிகள், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன உயர்ரக துப்பாக்கிகள், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ எடையுள்ள மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rathna
நவ 10, 2025 16:49

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று கூச்சல் போடுவார்கள். ஆனால் இங்கு நடப்பது என்ன, டாக்டர் படித்து மற்ற உயிரை கருணையுடன் காப்பாற்ற வேண்டியவன் 350 கிலோ வெடி மருந்தை காஷ்மீரில் இருந்து கடத்தி வந்து அப்பாவி மக்களை கொல்ல முயற்சிக்கிறான். இறக்கும் அப்பாவிகளில், அவனுடைய மதத்தை சார்ந்தவர்களும் இருப்பார்கள் என்ற அறிவு கூட இல்லை. உலகம் முழுவதும் பிரச்சனை செய்கிறான். நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்துவ மக்களை மத காரணங்களுக்காக அவர்கள் வீட்டிலேயே கொல்கிறான், அல்லது வீட்டில் குண்டு வைக்கிறான். என்ன கேவலமான மனிதர்கள்.


என்றும் இந்தியன்
நவ 10, 2025 16:00

350 கிலோ வெடிமருந்து துப்பாக்கி பறிமுதல்?????அவ்வளவு வெயிட்டை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு இந்தியாவில் சுலபமாக கொண்டு சொல்லமுடியுமா என்ன???அதுவும் செஞ்சது யாரு???ரெண்டு டாக்டர்கள். தயவு செய்து சட்டம் ஒழுங்கு நீதி என்று பார்க்காமல் தவறு கண்டேன் சுட்டேன் மற்றும் இதில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடித்தேன் சுட்டேன் செய்யுங்கள் அது போதும்


கரீம் பாய், ஆம்பூர்
நவ 10, 2025 13:42

சிற சேதம் செய்ய வேண்டும் சவுதி பாணியில்...


xyzabc
நவ 10, 2025 13:34

இந்த பிரச்சனையை முழுமையாக தீர்ப்பது எப்படி?


Mohan
நவ 10, 2025 15:25

இதை தீர்க்க முடியவே முடியாது கடைசி ஒரு மூர்க்கன் இருக்கும் வரை இது தொடரும்


Sudha
நவ 10, 2025 13:30

ராகுல் ஸ்டாலினுக்கு சொல்லுங்கள், இனி பிரிவினை பேசினால் திஹார் தான்


S.L.Narasimman
நவ 10, 2025 13:15

இவர்கள் படித்தது இந்தியர்கள் பணத்தில். சிறையில் வசதியான வாழ்க்கைக்கு மீண்டும் நம் பணம். பிடித்தவுடன் சுட்டுதள்ளவேண்டியதுதானே என்கவுண்டர்லே. யார் கேட்க போறார்கள்.


naranam
நவ 10, 2025 12:55

அவர்கள் அனைவரையும் உடனுக்குடன் கொன்று விடுங்கள். அது தான் நாட்டுக்கு நல்லது. காஷ்மீரில் உள்ள ஹமாஸ் அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் ஜமாத் மதரஸா என அனைத்தையும் இந்த 360 கிலோ வெடிப்பொருட்களைக் கொண்டு தரை மட்டமாக்கி விடவேண்டும். விரைவில் பிஓகே என்றழைக்கப் படும் பகுதியை இந்தியாவுடன் இணைத்து விட்டால் மட்டுமே இந்தப் பிரச்னை சற்றே குறையும். பிறகு நக்சலைட்டுகள் போல நாடெங்கும் பரவியுள்ள தீவிரவாதிகளையும் சுட்டுச் சாய்க்கவேண்டும்.


M Ramachandran
நவ 10, 2025 12:29

டாக்டர் தொழில் படிக்க அரசு நிதிஉதவி பெரும் ஈன புத்தியுட மத வெறியன். அவனுடய அவயங்க தேவையான கழட்டி எடுத்து தானம் கொடுக்கலாம்.


ASIATIC RAMESH
நவ 10, 2025 12:28

இருவரும் மருத்துவர்கள் .... அதிலும் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்... அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, ஏகே 47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன... அப்ப யார் யாரெல்லாம் உடந்தையோ.. எத்தனை மாணவர்ளை மூளைச்சலவை செய்து வந்தானோ....


sundar
நவ 10, 2025 12:00

மதம் என பிரிந்தது போதும். தீவிர வாதத்திற்கு மதம் இல்லை. என்று வழக்கம் போல் உருட்டுங்கள்.அமைதிகள் உள்ளவரை அமைதியில்லை


சமீபத்திய செய்தி